மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று (30) முதல் 14 நாட்களுக்கு விடுமுறையில் உள்ளதாகவும் அவர் விடுமுறை நிறைவு செய்து மீண்டும் கடமைக்கு திரும்பும் வரை பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்ரமரத்னவினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
பிரஜா பொலிஸ் மற்றும் சுற்றாடலுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் கடமை (விசேட கடமையின் அடிப்படையில்) பதவிக்கு மேலதிகமாக, இன்று (30) முதல் பிரதிப் பொலிஸ் மா அதிபர் டீ.ஜே. ஜகத் பலிஹக்கார நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 09ஆம் திகதி காலி முகத்திடலில் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் தேசபந்து தென்னகோன் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளதோடு, அவருக்கு நீதிமன்றம் பயணத் தடையையும் விதித்துள்ளது.
குறித்த வழக்குடன் தொடர்பான பெரும்பாலான சாட்சிகள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் சாட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படாமிலிருக்க, விசாரணைகளில் தேவையற்ற தலையீடுகளை தடுக்கும் வகையில், தேசபந்து தென்னகோனை மேல் மாகாணத்தில் இருந்து இடமாற்றம் செய்யுமாறு, பொலிஸ் மா அதிபருக்கு சட்ட மா அதிபர் அறிவுறுத்தியிருந்தார்.
எனினும் குறித்த உத்தரவு இதுவரை நிறைவேற்றப்படாத நிலையில், பொலிஸ் மா அதிபரை நீதிமன்றத்தில் முன்னிலையாகி அதற்கான காரணங்களை முன்வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் அழைப்பாணை விடுத்துள்ளது. அதன்படி, பொலிஸ் மா அதிபர் நாளை (31) நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment