முதலாம் திகதி 10 மணிநேரம் எரிவாயுவுக்காக காத்திருந்த மக்கள் ஏமாற்றம் .



காரைதீவு சகா-
நேற்று முன்தினம் முதலாம் திகதி எரிவாயு பெறுவதற்காக 10 மணி நேரம் காத்திருந்து ஏமாற்றமடைந்த மக்கள் மனம் விரக்தியுடன் மனம் வெதும்புகிறார்கள்.

காரைதீவு விபுலானந்த மைதானத்தில் சுமார் 1000 தமிழ் முஸ்லிம் மக்கள் பத்து மணி நேரம் காத்திருந்து அதுவும் முதலாம் திகதியன்று ஏமாற்றம் அடைந்தார்கள்.
அக்கரைப்பற்று சம்மாந்துறை போன்ற பிரதேசங்களில் அங்குள்ள முகவர்கள் இன்று எரிவாயு வழங்கப்படமாட்டாது என்று கூறியது போன்று பதிவு இந்த பிரதேசங்களில் உள்ள முகவர்களும் அப்படி சொல்லியிருந்தால் நாங்கள் பத்து மணி நேரம் கொளுத்தும் வெயிலில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அரசாங்கம் தான் எங்கள் வதைக்கிறது என்றால் எரிவாயு முகவர்களும் எங்களை வெறுக்கிறார்கள் இதற்கெல்லாம் இறைவனின் தீர்ப்பு உண்டு என்று அந்த மக்கள் மனக் கவலையுடன் தெரிவிக்கின்றார்கள்.

ஊடகங்கள் கூட எங்களை கண்டு கொள்வதில்லை ஏனைய இடங்களில் இடம் பெறும் சம்பவங்கள் காட்டப்பட்டு கொண்டிருக்கின்றது. ஆனால் நாங்கள் இங்கு பத்து மணிநேரம் காய்ந்து கருவாடாகி கூடியிருக்கிறோம் எங்களை ஊடகங்களும் கண்டுகொள்ளாமல் இருப்பது மிகுந்த வேதனையை அளிக்கின்றது என்று அந்த மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :