11 வயது சிறுமி துஷ்பிரயோகம்- தலைமறைவாகி இருந்த இருவர் கைது



பாறுக் ஷிஹான்-
11 வயது மதிக்கத்தக்க சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உள்ளான சம்பவத்தில் தலைமறைவாகி இருந்த இரு சந்தேக நபர்களை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டாளைச்சேனை பகுதியில் உள்ள ரஹ்மானியாபாத் பகுதியில் கடந்த 2022.05.23 இரவு 11 வயதான சிறுமி ஒருவர் சம்பவ தினமன்று தனது குடும்பத்துடன் கடற்கரைக்குச் சென்றுள்ள நிலையில் இடைநடுவே குறித்த சிறுமியின் மூத்த சகோதரி வீடு செல்ல நேரிட்டமையினால் ஏனைய உறவினர்கள் கடற்கரையில் இருக்கும்போது விளையாடிக் கொண்டிருந்த குறித்த 11 வயதான சிறுமியை சகோதரியின் பாதுகாப்புக்காக வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.

தனது சகோதரியை வீட்டுக்கு கொண்டு சென்று விட்டு 11 வயதான சிறுமி மீண்டும் கடற்கரைக்கு இரவு 10.30 மணியளவில் தனியாக திரும்பிக் கொண்டிருந்தபோது சிறுமியை இடைமறித்த இருவர் அவரின் வாயை கைகளினால் பொத்தி அருகில் உள்ள வீடு ஒன்றுக்குள் தூக்கிச் சென்று அங்கு ஒருவர் வெளியில் காவலிருக்க மற்றையவர் அந்தச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

பின்னர் அந்த சிறுமியை மிரட்டி யாரிடமும் சொல்ல வேண்டாம்இ மீண்டும் தாம் அழைத்தால் வர வேண்டும் என தெரிவித்து சிறுமியை மதிலுக்கு மேலால் தூக்கிப் போட்டுள்ளமை பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இச்சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்ததுடன் இச்சம்பவத்தினை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.எம் றிபாஸ்தீன் தனது முகநூலின் ஊடாக வெளிப்படுத்தி சிறுமிக்கான நீதியை நிலைநாட்டுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை(31) அன்று அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்ட விசேட தேடுதலில் குறித்த சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக சந்தேகத்தின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஒலுவில் பகுதியை சேர்ந்த 16 வயதினை உடைய சிறுமியின் உறவு முறைக்காரர்கள் என விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும் 11 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் கைதான 16 வயதான இரு சந்தேக நபர்களையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிவான் செவ்வாய்க்கிழமை (31) உத்தரவிட்டுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :