21ம் திருத்தம் தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல்குழு 8ம் திகதி தீர்மானிக்கும்மனோ கணேசன்



8ம் திகதி கொழும்பு நுகேகொடை செயலகத்தில் கூடவுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு கூட்டத்தில் 21ம் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் முடிவெடுக்கப்படும் என கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமை, ஜனாதிபதி வகிக்க கூடிய அமைச்சுக்கள், பிரதமரை நீக்குவதற்கான ஜனாதிபதியின் அதிகாரம், அமைச்சர்களை நியமிப்பதற்கான பிரதமரின் அதிகாரம், இரட்டை குடியுரிமை, சுயாதீன குழுக்கள், நீதிமன்ற சுயாதீனம் உட்பட்ட விவகாரங்களை ஆராயும் அதேவேளை இவற்றை விட இந்த அரசியலமைப்பு திருத்தத்தின் பக்க விளைவாக விகிதாசார தேர்தல் முறைமைக்கும், 13ம் திருத்தம் மூலமான மாகாணசபை முறைமைக்கும் உடனடியாகவோ, காலம் கழித்தோ வரக்கூடிய ஆபத்துகள் தொடர்பிலேயே தமிழ் முற்போக்கு கூட்டணி விசேட அவதானத்தை கொண்டுள்ளதாக மனோ கணேசன் எம்பி மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :