சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு தலா 5,000 ரூபா நிவாரணக் கொடுப்பனபு வழங்கும் நடவடிக்கை நேற்று முன்தினம் புதன்கிழமை (01) ஆரம்பமானது.
பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சி.எம்.நஜீம், சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.றிபாயா உட்பட கிராம சேவகர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் பங்கேற்றிருந்தனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு 03 மாத காலத்திற்கு மாதாந்தம் 5,000 ரூபா நிவாரண கொடுப்பனவை வழங்கும் விசேட திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் 2864 சமுர்த்தி பயனாளிகளும் சமுர்த்தி உதவி பெறுவதற்காக காத்திருப்போர் பட்டியலிலுள்ள 1161 பயனாளிகளுமாக மொத்தம் 4025 குடும்பங்கள் இக்கொடுப்பனவை பெறத்தகுதி பெற்றிருப்பதாக பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக் தெரிவித்தார்.
நேற்றைய தினம் சாய்ந்தமருது-05 ஆம் பிரிவிலுள்ள பயனாளிகளுக்கு பிரதேச சமுர்த்தி வங்கியினால் இக்கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தில் இக்கொடுப்பனவை வழங்குவதற்காக 2,002 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்டத்திலுள்ள 20 பிரதேச செயலகங்களிலுள்ள 43 சமுர்த்தி வங்கிகள் ஊடாக இக்கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் எம்.எஸ்.எம் சப்றாஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment