அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள அல் ஹாமியா அரபுக்கல்லூரியின் எதிர்வரும் ஜுலை மாதம் இடம்பெறவுள்ள 6 ஆவது பட்டமளிப்பு விழா தொடர்பில் சனிக்கிழமை (11) கலந்துரையாடல் ஒன்று அரபுக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடல் அரபுக்கல்லூரியின் பழைய மாணவர் சங்க ஏற்பாட்டில் சங்க தலைவர் ஏ.எல் நாஸிர் கனி தலைமையில் நடைபெற்றது.
இதன் போது 7 வருடங்களின் பின்னர் எதிர்வரும் ஜுலை மாதம் இடம்பெறவுள்ள அல்ஹாமியா அரபுக்கல்லுரியின் 6ஆவது பட்டமளிப்பினை சிறப்பாக நடாத்துவதுடன் அதற்கான ஏற்பாடுகளை சகலரும் இணைந்து மேற்கொள்வதற்கு முடிவு எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இக்கலந்துரையாடலில் கல்லூரியின் ஆளுநர் சபைத் தலைவர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், விழாக்குழுத் தலைவர் முன்னாள் கல்முனை பிரதேச சபை உறுப்பினரும் ஓய்வு பெற்ற அதிபருமான அப்துல் கபூர், பொருளாளர் எம்.எம்.எம் மன்சூர், முன்னார் பழைய மாணவர் சங்க தலைவர் யு.எல்.எஸ் ஹமீட் ஹாமி ,கல்லூரி அதிபர் ஏ.சி தஸ்தீக் மதனி, மற்றும் பழைய மாணவர் சங்க நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களானவை.பி.ஏ சுல்தான், எம்.ஐ.எம் மாஜீட் ,எம்.ஐ.எம் ஹசன்முபாறக், ஏ.எல் நௌபர், ஏ.அலி அஹமட் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட ஆலிம்கள் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment