தேனிக்கள் கொட்டியதில் 74 வயதுடைய நபர் மரணம்; வாழைச்சேனையில் சம்பவம்



எச்.எம்.எம்.பர்ஸான்-
தேனிக்கள் கொட்டியதில் இன்று புதன்கிழமை (8) வயோதிபர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை - 5 ஆம் வட்டாரம் உமர் வைத்தியர் வீதியைச் சேர்ந்த 74 வயதுடைய மீராலெப்பை அபுசாலி என்பவரே தேனிக்கள் கொட்டி இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

வர்த்தக நிலையம் ஒன்றிற்கு சென்றிருந்த அந்நபர் மீது கட்டடம் ஒன்றில் கூடமைத்திருந்த தேனிக்கள் கலைந்து கொட்டியதிலேயே அவர் மரணமடைந்துள்ளார்.

மரணமடைந்த நபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :