இம்முறை ஹஜ்ஜுக்கு செல்வதை நிறுத்தியுள்ளதாக அரசாங்க தரப்பு சொல்லியுள்ளது. இது சரியானதா என்பதை நாம் நடுநிலையுடன் சிந்திக்க வேண்டும்.
ஒருவர் ஹஜ்ஜுக்கு செல்வதாயின் விமான டிக்கற் தவிர்ந்த அனைத்தும் அந்நிய செலாவணி மூலம் செலுத்த வேண்டும்.
மக்கா மதீனாவில் தங்குமிட பதிவுகள், சவூதி கட்டணம், கைச்செலவுக்கு பணம் என அனைத்தும் அந்நிய செலாவணி மூலமே செலுத்தப்படும்.
நாட்டில் மக்கள் உணவு உண்ணக்கூட வழியில்லாத அளவுக்கு அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக உணவு வகைகளை இறக்குமதி செய்ய முடியாத சூழலில் ஒரு ஹாஜிக்கு பல்லாயிரம் அந்நிய செலாவணி செலவு செய்வது பற்றி யோசிக்கத்தான் வேண்டும்.
நாடு இன்று உள்ள நிலையில் இது முஸ்லிம்கள் பற்றிய தப்பபிப்பிராயத்தையும் ஏனைய மக்கள் மத்தியில் ஏற்படுத்தலாம்.
அந்த வகையில் நாட்டின் இன்றைய வறுமையையும் அந்நிய செலாவணி தட்டுப்பாட்டையும் கருத்தில் கொண்டு இம்முறை ஹஜ் என்ற தியாகத்தை தியாகம் செய்கிறோம் என முஸ்லிம்கள் அறிவிப்பது நல்லது.
நாடு நல்ல நிலைக்கு வருமாயின் அடுத்த வருடம் ஹஜ்ஜுக்கு செல்ல இறைவன் வழி வகுக்க பிரார்த்திப்போம்.
முபாறக் அப்துல் மஜீத் மௌலவி
தலைவர்
ஐக்கிய காங்கிரஸ் கட்சி
(உலமா கட்சி)
0 comments :
Post a Comment