புதிய ரிக்சா வண்டி; சாய்ந்தமருதில் கண்டுபிடிப்பு..!



றொஸான் முஹம்மட்-
ரிபொருள் பிரச்சினை நாடளாவிய ரீதியில் தலைவிரித்தாடும் இன்றைய சூழலில் எரிபொருள் இல்லாமல் ஆறுபேர் பயணிக்க கூடிய புதிய போக்குவரத்து சாதனம் ஒன்று சாய்ந்தமருதில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதை சேர்ந்த முஹம்மது நிஸார் என்ற நபரே எரிபொருள் இல்லாமல் ஆட்களைச் சுமந்து செல்லும் வகையிலான புதிய ரிக்சா துவிச்சக்கர வண்டியொன்றைக் கண்டுபித்துள்ளார்.

ஐந்து குழந்தைகளுக்கு தந்தையான இவர் சுமார் இரண்டு வாரங்களுக்கு மேலாக முழுமையாகச் செலவிட்டு குறித்த ரிக்ஷாவைக் கண்டு பிடித்துள்ளார்.

ஒரே நேரத்தில் 6 பாடசாலை மாணவர்கள் அமர்ந்து பயணம் செய்யக்கூடிய வசதிகளை இவ் ரிக்சா கொண்டுள்ளது. பாடசாலை மாணவர்கள் பெட்ரோல் இல்லாத இக்கால பகுதியில் முச்சக்கரவண்டி இல்லாமல் கஷ்டப்படும் நிலையை கருத்தில் கொண்டே இதனை செய்ததாகவும் முஹம்மட் நிஸார் தெரிவிக்கின்றார்.
மிக நீண்டகாலமாக வெல்டிங் வேலைகள் செய்து வரும் இவர் இவ்வாறான வண்டிகளை தொடர்ச்சியாக செய்து பயனாளிகளுக்கு வழங்கப் போவதாகவும், தற்போது இரண்டாவது வண்டியை செய்வதற்கான வேலைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :