சன் பிளவா் தொழிற்பயிற்சி கல்வி நிலையத்தினால் டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!


அஷ்ரப் ஏ சமத்-
தெமட்டக்கொடையில் உள்ள சன் பிளவா் தொழிற்பயிற்சி கல்வி நிலையத்தினால் கொழும்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைவிட்டு வெளியேறிய மாணவிகள் பல்வேறு சுயதொழில் பயிற்சி நெறிகளை பயின்று டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 30.05.2022 பி.ஜ.எம்.சி.எச் ல் பணிப்பாளா்கள் எம். ஹப்ரா மற்றும் எம்.எம். முர்சித் தலைமையில் நடைபெறறது.

கொழும்பு பிரதேசத்தில் பாடசாலைக் கல்வியை பயின்று வீடுகளில் தங்கியிருக்கும் மாணவிகள் தமக்கென சுயதொழில் முயறசிக்காக தொழில் நுடப்ப பாடநெறியொன்றை பயின்று அதனுடாகவே தமது வருமானத்தினை மீட்டிக் கொள்ள இப்பயிற்சிநெறிகள் பெரிதும் உதவுவதாகவும் இத்துறையை மேலும் பட்டப்படிப்பு தரத்திற்கு கற்பதற்கும் வழிவகுத்தல் வேண்டுமென பிரதம அதிதிய கலாநிதி அநீஸ் மாணவிகளை வேண்டிக் கொண்டாா்.

இங்கு தையல்கலை, வடிவலங்காரம், மனையியற்கலை மற்றும் ஆசிரிய பயிற்சி போன்ற டிப்ளோமா பயிற்சி நெறிகளை வெற்றிகரமாக பூர்த்திசெய்த மாணவிகளுக்கு அதிதிகளினால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் ஜே.ஜே. பவுன்டேசன் தலைவா் டொக்டா் அனீஸ், குளோபல் கல்வி நிலையத்தின் தலைவா் ஏ.எம். றியாஸ், மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் ஆசிரியா் மொஹமட் ஹசீன், சுராடோ கெம்பஸ் பணிப்பாளா் திசானி தருசிக்கா ஆகியோறும் கலந்து சிறப்பித்தாா்கள்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :