திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலய ஆடி அமாவாசை உற்சவம் .



காரைதீவு சகா-
ரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை உற்சவத்தையொட்டிய ஆலயத்தின் அதிகார சபை கூட்டம் நாளை மறுதினம் (19) ஞாயிற்றுக்கிழமை ஆலய முன்றலில் ஆலய தலைவர் சுந்தரலிங்கம் சுரேஷ் தலைமையில் நடைபெற இருக்கின்றது .

ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை உற்சவம்
எதிர்வரும் ஜூலை மாதம் 11ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது என்று ஆலய தலைவர் சுந்தரலிங்கம் சுரேஷ் தெரிவித்தார் .

இந்த உற்சவம் 18 நாட்கள் நடைபெற்று ஜுலை மாதம் இருபத்தி எட்டாம் (28)தேதி தீர்த்த உற்சவத்துடன் நிறைவடைய இருக்கின்றது .

ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள் முன்னிலையில் ஆலயகுரு சிவஸ்ரீ அங்குசநதாதக்குருக்கள் தலைமையில் உற்சவம் நடைபெறவுள்ளது.
கடந்த வருடம் ஆடிவேல் உற்சவம் கொரோனா தீநுண்மியின் தாக்கம் காரணமாக நடைபெறவில்லை.
இம்முறை இதனை வெகு சிறப்பாக நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக ஆலய தலைவர் சுரேஷ் மேலும் தெரிவித்தார்.

நாளை மறுதினம் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தின் அதிகார சபை கூட்டம் ஆலய முன்றலில் ஆலய தலைவர் சுந்தரலிங்கம் சுரேஷ் தலைமையில் நடைபெற இருக்கின்றது .
உற்சவம் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளன.
பூஜை உபயகாரர்கள் ஒலி ஒளி விளக்கு வசதி போக்குவரத்து வசதி உள்ளிட்ட பல விடயங்கள் தீர்மானிக்கப்படவிருக்கின்றன .

பிதிர்க்கடன் செலுத்துகின்ற ஆடி அமாவாசை உற்சவம் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள் என்பதற்காக முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
விசேடமாக ஆலயம் சார்பில் அன்னதான குழு ஒன்றும் புதிதாக உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் அந்தக் குழுவிற்கு பலர் நியமிக்கப்பட்டு இருக்கின்றார்கள் இந்த குழுவினரே ஆலயத்தில் நடைபெறுகின்ற அனைத்து அன்னதான நிகழ்வையும் மேற்கொள்வார்கள் அதேவேளை அதற்கு உதவ விரும்புகின்ற பொதுமக்கள் ஆலய நிர்வாகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று ஆலய தலைவர் சுந்தரலிங்கம் சுரேஷ் தெரிவித்தார் .

தீர்த்தம் அன்று பிதிர்க்கடன் செலுத்துகின்ற வர்களுக்கு வசதியாக பத்து சிவாச்சாரியார்கள் உள்ளடக்கி பிதிர்க்கடன் நிறைவேற்றுகின்ற வேலை முன்னெடுக்கப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :