சமூக பாதுகாப்பு மாநாடு பிரச்சார துவக்க பொதுக்கூட்டம். பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் சென்னையில் நடைபெற்றது.



இப்ராஹிம் கனி-
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் சமூக பாதுகாப்பு மாநாடு பிரச்சார துவக்க பொதுக்கூட்டம் சென்னை மண்ணடியில் இன்று நடைபெற்றது.

சென்னை மண்டல தலைவர் பக்கீர் முகமது தலைமை தாங்கினார். தென் சென்னை மாவட்ட தலைவர் அபுபக்கர் சாதிக் வரவேற்றார்.

மாநில துணைத்தலைவர் ஹா லித் முஹம்மது, மாநில செயலாளர்கள் நாகூர் மீரான், முஹம்மது ரசீன், செயற்குழு உறுப்பினர் முஹம்மது ரபீக் ராஜா , மண்டல செயலாளர் அகமது முகைதீன், எஸ்.டி.பி.ஐ கட்சி சென்னை வடக்கு மண்டல தலைவர் முஹம்மது ரசீது, வர்த்தக அணி முகைதீன், ஆல் இந்தியா லாயர்ஸ் கவுன்சில் ராஜா முஹம்மது, கேம்பஸ் ப்ரண்ட் மாநில செயலாளர் முஹம்மது அயூப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநிலத் தலைவர் முஹம்மது சேக் அன்சாரி, பொதுச்செயலாளர் முகைதீன் அப்துல் காதர், ஒரு சேகண்ட் செயலாளர் முகைதீன் அப்துல் காதர், எஸ்.டி.பி.ஐ கட்சி மாநிலத் துணைத் தலைவர் அப்துல் ஹமீது, ஐக்கிய சமாதான பேரவை மாநில பொதுச்செயலாளர் மௌலவி முஜிபுர் ரஹ்மான் பாகவி, ஜம்இய்யத்துல் உலமாயே ஹிந்த் மாநில செயலாளர் எம்.ஜி.கே.நிஜாமுதீன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

காஞ்சி மாவட்ட தலைவர் சதக்கத்துல்லாஹ் தொகுத்து வழங்கினார். வட சென்னை மாவட்ட தலைவர் அப்துல் ரஹ்மான் நன்றி கூறினார்.

கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாநிலத் தலைவர் முஹம்மது சேக் அன்சாரி பேசுகையில்,

நமது நாடு மிக மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது. மக்களாட்சித் தத்துவம் அடித்து நொறுக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. பாசிச பாஜக அரசு 2014 இல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து தொடர்ச்சியாக மக்களாட்சிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது .
வேலை வாய்ப்பை தருகின்றேன் என்று ஆட்சிக்கு வந்தார் மோடி. ஆனால் இன்று தொடர்ச்சியாக வேலை வாய்ப்பு பறிபோய் கொண்டிருக்கின்றது. மக்கள் விரோத கொள்கைகளை தொடர்ச்சியாக முன்வைக்கின்றார். கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என்று சொல்லி மக்கள் புழக்கத்தில் பயன்படுத்துகின்ற 500 1000 ரூபாய் நோட்டுகளை ஒட்டு மொத்தமாக அழித்து, ஆயிரக்கணக்கான மக்கள் அவர்கள் இறப்பின் விளிம்புக்கே செல்லக்கூடிய ஒரு சூழல் ஏற்பட்டது.
கோவிட் சமயத்தில் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பதற்கான எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையும் இவர்கள் மேற்கொள்ளவில்லை. மக்களுடைய வரிப் பணம் இன்று பணக்காரர்கள், தொழிலதிபர்கள் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. நாட்டின் சொத்துக்களை அம்பானிக்கும், அதானிக்கும் விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

என் ஐ ஏ அமைப்பு என்பது நரேந்திர மோடி இன்வெஸ்டிகேஷன் ஏஜன்ஸி ஆக மாறியுள்ளது. பாஜகவை சார்ந்தவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டும் அல்லது ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு எம்எல்ஏக்களை விலை கொடுத்து குதிரை பேரம் பேசிய நிறைய சம்பவங்கள் நடந்திருக்கின்றன. நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரூபாய் தொடங்கிய இந்த குதிரை பேரத்தை அமலாக்கத் துறை விசாரணையும் நடத்தவில்லை. ஆனால் மக்கள் இயக்கங்கள், எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கான முயற்சியை அதிகாரத்திற்கு வந்திருக்கக்கூடிய பாஜக அரசு அமலாக்கத்துறை வைத்து செயல்படுத்துகின்றது.

தீவிரவாத அமைப்புகளை கட்டுப்படுத்தக்கூடிய அதை விசாரணை செய்யக்கூடிய ஒரு அமைப்பு தான் என்.ஐ.ஏ. ஆனால் இந்த தீவிரவாத செயல் திட்டங்களை ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதும் யார் செயல்படுகிறார்கள் என்பதை ஒட்டுமொத்த ஊடகங்களும் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.
ராமநவமி என்பது இந்துக்களும் கொண்டாடக்கூடிய பண்டிகை ஆனால் ராம நவமி பெயரில் ஊர்வலம் நடத்தி முஸ்லிம்கள் வசிக்கக்கூடிய பகுதிகளில் திட்டமிட்டு கலவரத்தை மேற்கொண்டார்கள் . ஆனால் என்.ஐ.ஏ இதுவரைக்கும் எந்த விசாரணையும் நடத்தவில்லை. ஆனால் பொதுமக்கள் சிலர் சமூக வலைதளங்களில் ஏதாவது ஆக்ரோஷமாக எழுதி பதிவிட்டால் , அவரது அமைப்பை நோக்கியும் அந்த அமைப்பின் உறுப்பினர்களுடைய வீடுகளை நோக்கி வேகமாக விரைந்து செயல்படுகின்றன

எனவேதான் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவும் மக்களாட்சி பாதுகாக்கப்பட வேண்டும் என்கிற மகத்தான தத்துவத்தை முன்வைத்து பாசிசத்துக்கு எதிராக மக்களை அணி திரட்டும் பணியை இந்தியா முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் துவங்கி இருக்கின்றது. வரும் ஜூலை 24 அன்று சென்னையில் சமூக பாதுகாப்பு மாநாடு ஒன்றை நடத்த முன் முடிவு செய்து அதற்கான பிரச்சார துவக்க பொதுக்கூட்டத்தை தற்போது சென்னையில் தம்புச்செட்டி தெருவில் நடத்தி இருக்கிறோம்.
ஆகவே இந்த மக்களாட்சியை பாதுகாப்போம் என்கிற அந்த முழக்கத்தை வெற்றி பெற செய்வது மக்களுடைய கடமை . மேலும் சென்னையில் ஜூலை 24 இல் நடைபெறவுள்ள சமூக பாதுகாப்பு மாநாட்டில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு நாட்டின் அரசியல் அமைப்பை பாதுகாக்க அணி திரள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :