காரைதீவில் இடம்பெற்ற பாலின வன்முறை தடுப்பு செயலணி குழுக்கூட்டம் !



நூருல் ஹுதா உமர்-
நாட்டில் ஆங்காங்கே பல்வேறு பாலின வன்முறை சம்பவங்கள் பதிவாகிவரும் சூழ்நிலையில் காரைதீவு பிரதேச செயலக சிறுவர் பெண்கள் அபிவிருத்தி பிரிவு ஏற்பாடு செய்திருந்த காரைதீவு பிரதேச பாலின வன்முறை தடுப்பு செயலணி குழுக்கூட்டம் காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் காரைதீவு உதவி பிரதேச செயலாளர் எஸ் பாத்தீபன், காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லீமா வஸீர், காரைதீவு பிரதேச சபை செயலாளர், மதுவரி திணைக்கள உத்தியோகத்தர் ,சிறுவர் நன்நடத்தை திணைக்கள உத்தியோகத்தர், தொழில் அலுவலக உத்தியோகத்தர் , கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை உத்தியோகத்தர், தொழிற்பயிற்சி அதிகாரசபை உத்தியோகத்தர்கள் காரைதீவு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களில் இருந்தும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பிரதேசத்தில் சிறுவர் மற்றும் பெண்கள் எதிர் நோக்கும் பல்வேறு பட்ட பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :