இந்திய தமிழ் நாட்டிலிருந்து அன்பளிப்பாக கிடைக்கப் பெற்ற உலர் உணவுப் பொதிகள் தம்பலகாமம் பிரதேச செயலப் பகுதியிலும் இன்று (01) வழங்கி வைக்கப்பட்டன.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் குறித்த உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
வறுமைக் கோட்டின் கீழ் வாழும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்காக வழங்கப்பட்டன .தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியை உள்ளடக்கிய 12 கிராம சேவகர் பிரிவுகளுக்கும் இதனை பிரதேச செயலாளர் உரிய கிராம சேவகர் பிரிவின் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் கையளித்தார். மொத்தமாக 1600 பொதிகள் தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்கு வழங்கப்பட்டுள்ளன . இந்திய தமிழக அரசுக்கு மக்கள் நன்றிகளையும் இதன் போது தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment