பெஸ்ட் ஒப் யங் அமைப்பினால் அல் மஸ்லம் வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் ஏடுகள் வழங்கி வைப்பு !!



நூருல் ஹுதா உமர்-
ம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனமான நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பு "மாணவர் மகிமை" எனும் வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் ஏடுகள் கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக பாதிக்கப்படும் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு கரம் கொடுக்கும் வகையில் பெஸ்ட் ஒப் யங் அமைப்பின் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த கற்றல் ஏடுகள் வழங்கும் நிகழ்வு இன்று நிந்தவூர் கமு/ கமு/ அல்- மஸ்லம் வித்தியாலயத்தில் இடம்பெற்றது

பாடசாலை அதிபர் இஸட். அஹமட் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் அமைப்பின் தலைவர் ஐ எம் நிஸ்மி, செயலாளர் ஏ புஹாது உட்பட பாடசாலை ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். இதன்போது 2022 கல்வியாண்டில் மாணவர்களுக்கு வழங்குவதற்கு கோரிக்கை விடுத்தும் குறைவாக கிடைக்கப்பெற்ற தரம் 2 கணிதம் செயல்நூல், மற்றும் தரம் 5 மாணவர்களுக்குரிய ஆங்கிலம் செயல்நூல் ஆகிய பாடப் புத்தகங்கள் பெஸ்ட் ஒப் யங் அமைப்பினால் கிடைக்கப்பெறாத மாணவர்களுக்கு இலவசமாக வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :