ஓட்டமாவடி மக்களின் ஆர்ப்பாட்டத்திற்கு தீர்வு



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
ட்டமாவடி பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் வினியோகத்தில் மோசடி இடம் பெறுவதாக தெரிவித்து நடத்தப்பட்ட மக்கள் போராட்டம் இன்று (வியாழக்கிழமை) அதிகாரிகளின் தலையீட்டின் பின்னர் முடிவுக்கு வந்தது.
பழுதடைந்த பெற்றோல் பம் திருத்தப்பட்ட நிலையில் பெற்றோல் வினியோகம் இடம் பெற்றதாகவும் பொது மக்களுக்கு பெற்றோல் வினியோகம் இடம்பெறவில்லை.
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஊழல் இடம் பெறுகின்றதுடன் தொடர்ந்து இரவு நேரங்களில் தனிப்பட்டவர்களுக்கு எரிபொருள் வழங்கப்படுகின்றது என்று கூறி எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக ஒன்று கூடிய பொது மக்கள் எதிர்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவ் விடத்திற்கு வருகை தந்த வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடிய போது எரிபொருள் நிலையத்தில் உள்ள இருப்பை பொது மக்களுக்கு இன்று காலை காட்டுவதாக உறுதியளித்ததையடுத்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டிருந்தனர்.

இன்று காலை எரிபொருள் நிலையத்திற்கு வருகை தந்த பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள், வாழைச்சேனை பொலிஸார், இராணுவத்தினர் கூட்டுறவு சங்க அதிகாரிகள் ஆகியோர் பொது மக்களுக்கு இருப்பை காண்பித்ததன் பின்னர் பொது மக்களுக்கு பெற்றோலும் மண்ணெண்னையும் வினியோகிக்கப்பட்டது.
பெற்றோல் 271 லீற்றர் இருப்பில் 270 லீற்றர் கட்டாயம் இருக்க வேண்டும் என்பதற்கமைய அறுபது லீற்றர் பெற்றோல் முன்நூறு ரூபாய் வீதம் 94 நபர்களுக்கு வினியோகிக்கப்பட்டதுடன் மண்ணென்னை 1300 லீற்றர் இருப்பு இருந்ததுடன் அதில் ஆயிரம் லீற்றர் மண்ணென்னை முன்நூறு ரூபாய் வீதம் 290 நபர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :