குவைத் நன்கொடையாளரினால் உடுகொட அறபா மாகா வித்தியாலத்துக்கு கட்டிடம்!



அஷ்ரப் ஏ சமத்-
ம்பஹா மாவட்டத்தில் உள்ள உடுகொட அறபா மாகா வித்தியாலத்தில் குவைத் துாதகரத்தினால் குவைத் நாட்டினைச் சோ்ந்த மறைந்த அஹமட் சாலிஹ் கந்தானி அவா்களின் நன்கொடை நிதியத்தின் கீழ் 2 மாடி வகுப்பறைக் கட்டிடங்களது மேல் மாடி வகுப்பறைகள் திறந்துவைக்கப்பட்டன். இந் நிகழ்வுகள் கல்லுாாி அதிபா் எம்.எம்.ஏ அலீம் தலைமையில் நடைபெற்றன.

இவ் விழாவுக்கு குவைத்நாட்டின் இலங்கைத் துாதுவா் சாா்பாக அவரின பிரநிதியும் குவைத் துாதரக அதிகாரி அஷ்சேக் எம் எம எம் பிர்தொளஸ் நளிமி, கௌரவ அதிதியாக இத்திட்டத்தின் செயலாளா் அஷ்சேக் எம்.ஏ.ஏ நுாறுல்லாஹ் நளிமி ஆகியோா்களும் இணைந்து இக் கட்டிடத்தினை திறந்துவைத்தனா்

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் குவைத்நாட்டில் இருந்து வந்து நன்கொடையாளா் அஹமட் சாலிஹ் கந்தானி இக் கட்டிடத்தின் முதல் மாடியை இப் பாடசாலையில் திறந்து வைத்தாா். அதிர்ஷ்ட வசமாக அவா் கொவிட் 19 காரணமாக காலமானதையிட்டு அவரின் புதல்வி இத்திட்டத்தினை பூரணப்படுத்துவதற்கு குவைத் துாதகரம் ஊடாக நிதியுதவி அளித்திருந்தாா்.. அதன் பயனாகவே இக் கட்டிடம் இன்று மாணவா்களிடம் கையளிக்கப்பட்டது. வெளிநாட்டவா்கள் நமது நாட்டின் கல்வி விருத்திக்காக அவா்கள் வழங்கும் நன்கொடை ஊடாக நாம் கல்வியில் முன்னேறுவதற்கே அவா்கள் உதவி புரிகின்றனா். இதனை கவணத்திற்கெடுத்து இப்பிரதேச மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேறுதல் வேண்டும்.

இந் நிகழ்வில பாடசாலை ஆசிரியாகள் பெற்றோா்கள் பழைய மாணவ மாணவிகளும் பெருமளவில் கலந்து கொண்டனா். கடந்த 55 வருடகாலமாக இயங்கி வரும் இப்பாடசாலைக்கு தற்போதைய நமது நாட்டின் நிலவிவருகின்ற பொருளாதார நெறுக்கடியில் இவ்வாறான கட்டிடங்களை நமது பிரதேசத்தில் எதிா்பாா்க்க முடியாது இருந்தும் குவைத் நாட்டின் நன்கொடையாளிகள் எமது இலங்கை சிறாா்களது கல்விக்காக அவா்கள் முன் வந்து இவ்வாறரக உதவுவதையிட்டு நாம் நன்றியுடையவா்களாக இருத்தல் வேண்டும். அத்துடன் நன்கொடையாளிகளுக்காக துஆப் பிரா்த்தனையும் இடம் பெற்றது. தொடா்ந்தும் இக்கல்லுாாியின் விஞ்ஞான ஆய்வுகூடப் பிரச்சினைக்கும் தீா்வு பெற்றுத் தருவதாகவும் பிரதம அதிதி பிர்தௌஸ் தெரிவித்தாா-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :