திருகோணமலை மாவட்டம்,தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பாலம்போட்டாறு_ பத்தினிபுர கிராமத்தில் நிலக் கடலை அறுவடை நிகழ்வு இன்று (02) இடம் பெற்றது.
குறித்த அறுவடை நிகழ்வை தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
சௌபாக்யா உற்பத்திக் கிராமம் மூலமாக தெரிவு செய்யப்பட்டு சௌபாக்யா சங்கம் மூலமாக நிலக்கடலை,நிலக்கடலை அல்வா போன்ற உற்பத்தி பொருட்களும் இதன் போது சந்தைப் படுத்துவதற்காக பகிர்ந்தளிக்கப்பட்டது.
தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் ஒவ்வொருவரும் தங்களது வீடுகளில் வீட்டுத் தோட்ட பயிர்ச் செய்கையில் ஈடுபட வேண்டும் உணவுப் பற்றாக்குறை இல்லாதளவுக்கு ஒரு அங்குலமேனும் மரவள்ளி தடியையாவது நட வேண்டும் என பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி இதன் போது தெரிவித்தார்.
குறித்த இவ் அறுவடை நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப், கணக்காளர் செல்வதாஸ் மற்றும் கிராம உத்தியோகத்தர்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்,விவசாய போதனாசிரியர், சௌபாக்யா நிலக்கடலை உற்பத்தியாளர்கள்,தோட்டச் செய்கையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment