கிழக்கு மாகாண சதுரங்கப் போட்டியில் சாம்பியனான சாய்ந்தமருது சஹிரியன் நைட்ஸ் தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு ..!




எம்.என்.எம்.அப்ராஸ்-
கிழக்கு மாகாண சதுரங்கப் போட்டியில் சாம்பியனான சாய்ந்தமருது சஹிரியன் நைட்ஸ் சதுரங்க அணி தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டனர்.

கிழக்கு மாகாணவிளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்ப்பாட்டில் திருகோணமலை சுகாதார திணைக்கள பிராந்திய பயிற்சி நிலையத்தில் அண்மையில் நடைபெற்ற மாவட்டங்களுக்கிடையிலான மாகாண சதுரங்க போட்டியில் அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் பதிவு செய்யப்பட்ட சஹிரியன் நைட்ஸ் சதுரங்க அணியினர் (Zahirian Knights Chess Club)கிழக்கு மாகாண சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்று மாகாண சம்பியனாக தெரிவு செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளதுடன் தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சாய்ந்தமருது பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.எல்.சபூர்தீன் தெரிவித்தார்.

மாகாண மட்ட குறித்த சதுரங்க இறுதி போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட அணியை வீழ்த்திய நிலையில் அம்பாரை மாவட்ட அணியினர் சம்பியனாக தெரிவானமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சதுரங்கப் போட்டியில் அம்பாரை மாவட்டத்தை சேர்ந்த ஏ.எம்.ஷகீர் அஹமட் (அணி தலைவர்) எஸ்.எல்.எம்.சுஹூதான்,எப்.எம்.பமிஹாத்
எம் எச் எம். நுஸ்ரத்,ஐ.கே.எம்.ஆக்கில் கான் எம் ஸட் எம்.ஷனிப், ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதேவேளை இவர்களின் இந்த வெற்றி மூலம் சாய்ந்தமருது பிரதேசத்துக்கும் அம்பாரை மாவட்டத்துக்கும் பெருமை சேர்ந்துள்ளனர் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :