மொஹமட் அக்ரம் பாத்திமா அதீஷா என்ற சிறுமியின் வீட்டிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு சென்றிருந்தனர்.
இதன்போது அவரது குடும்பத்தினருக்கு குறித்த இருவரும் ஆறுதல் தெரிவித்திருந்தனர்.
குறிப்பாக நடந்த அநீதிக்கான நீதி கிடைக்க வேண்டும் எனவும், இனிவரும் காலங்களில் இவ்வாறான அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கவேண்டும் எனவும் இரா.சாணக்கியன் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.
அட்டுலுகம பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் தரம் 04-இல் கல்விகற்கும் மாணவி, கடந்த 27ஆம் திகதி காலை 10 மணியளவில் வீட்டிற்குத் தேவையான உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக அருகிலுள்ள கடைக்கு சென்றிருந்த நிலையில் வீடு திரும்பியிருக்கவில்லை.
இந்நிலையில், சிறுமியின் வீட்டிற்கு அருகிலுள்ள அட்டலுகம பள்ளிவாசலை அண்மித்து காணப்படும் சதுப்பு நிலத்திலிருந்து மறுநாள் அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டிருந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியளில் வைக்கப்பட்டுள்ளார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment