இன்று சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜூத் தலைமையில் ஏறாவூர் விவசாய போதனாசிரியர் பிரிவில் உள்ள ஏறாவூர் 03 ஐச் சேர்ந்த சமுர்த்தி பயனாளிகளுக்கு வீட்டுத் தோட்டச் செய்கை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இடம் பெற்றது.
இந்நிகழ்வில் வளவாளராக ஏறாவூர் விவசாய போதனாசிரியர் மு.ஹ.முர்ஷிதா ஷிரீன்,சமுர்த்தி முகாமையாளர் எஸ். இஸ்ஹாக், நிஹாறா உட்பட கிராம சேவகர் ஸாஹிர் ஹுஸைன்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் சமீம், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஜனா ரன்ஜனி,தாமோதரன் பிள்ளை உட்பட சமுர்த்தி பயனாளிகளும் பங்குபற்றினர்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட கொரோனா வைரசு தாக்கத்தினால் இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் எமது நாட்டில் மட்டுமல்லாது பல உலக நாடுகளிலும் பாரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக எமது கௌரவ விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களால் ஊடக சந்திப்பின் போது கருத்துத் தெரிவிக்கப்பட்டதாகவும் நாட்டிலுள்ள மக்களுக்கான அரிசி தேவை வருடம் ஒன்றுக்கு 2.4 மில்லியன் மெட்ரிக் தொன்னாக இருந்த போதும் 800 000 மெட்ரிக் தொன் இறக்குமதி மூலமே பூர்த்தி செய்யப்பட்டதாகவும் இன்றைய சூழலில் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதனால் உணவுக்கான தட்டுப்பாடு எற்பட வாய்ப்பு உள்ளதாகவும் அதனை தவிர்ப்பதற்கு குறுகிய கால பயிர்கள்,பழப் பயிர்கள்,உப உணவுப் பயிர்கள் உட்பட கிழங்குப் பயிர்களையும் பயிரிடுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டதுடன் தாவர நோய் பீடைகளுக்கான கட்டுப்பாட்டு முறைகள் தொடர்பான விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.
0 comments :
Post a Comment