கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பசுமை உற்பத்தி பொருட்கள் மலிவு விலையில் விற்பனை செய்ய பட்டுவருகிறது.
தற்போது நாட்டில் நிலவும் வறுமை காரணமாக, சேதன பசளையை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட மரக்கறிகள், தேங்காய்கள் ,அரிசி மற்றும் தேவையான பொருட்கள் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமைகளிலும் ,கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பசுமை விற்பனை நிலையத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.
வைத்தியசாலைக்கு வருகின்ற நோயாளர்களுக்கும், வைத்தியசாலையில் கடமை புரிகின்ற உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்காகவும் இந்த விற்பனை நிலையம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் இரா.முரளீஸ்வரனின் ஏற்பாட்டில் இந்த பசுமை விற்பனை நிலையம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment