சிட்னி "உதயசூரியன்" கிழக்கு "உதயசூரியனுக்கு" சிலை எடுக்கிறார்.



காரைதீவு சகா-
“சிட்னியில் வாழும் காரைதீவைச் சேர்ந்த "உதயசூரியன்" மாணவர் உதவி மையத்தின் தலைவரும், "உதயசூரியன்" பத்திரிகையின் நிர்வாக ஆசிரியருமான நாகமணி குணரெத்தினம் "கிழக்கு உதயசூரியன்" முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாருக்கு சிலை எடுக்கிறார்.

காரைதீவு சண்முகா மகா வித்தியாலயத்திலும் ,காரைதீவு சுவாமி விபுலானந்த கலாசார மண்டபத்திலும் விபுலானந்த சிலைகள் நிறுவப்படவுள்ளன
தனதுபெற்றோரான காரைதீவைச் சேர்ந்த பொன்னம்பலம் நாகமணி தம்பதிகள் நினைவாகவும், தனதுவளர்ப்பு தந்தை காத்தமுத்து வேல்நாயகம் (தலைமை ஆசிரியர்)தம்பதிகளின் நினைவாகவும் இச்சிலைகள் நிறுவப்படவுள்ளன.
காரைதீவு சண்முகவித்தியாலயத்தில் சுவாமி விபுலாநந்த அடிகளாரது திருவுருவச் சிலை ஒன்றினை நிறுவும் பணியினை அதிபர் எஸ்.மணிமாறன் மற்றும் எம்.புண்ணியநாதனது கண்காணிப்பில் ஆரம்பித்துள்ளார் .

கலாச்சார மண்டபத்தில் சிலை நிறுவும் பணி தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் மற்றும் ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா வழிகாட்டலில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இச் சிலைகள் பெரும்பாலும் சுவாமி விபுலானந்த அடிகளாரின் சிரார்த்த தினமான யூலை மாதம் 19 ஆம் திகதி திறந்து வைக்கலாம் என எதிர்பார்ப்பதாக உதயசூரியன் மாணவர் உதவி மையத்தின் தலைவரும், உதயசூரியன் பத்திரிகையின் நிர்வாக ஆசிரியருமான நாகமணி குணரெத்தினம் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :