அட்டாளைச்சேனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட றஹ்மத் நகர், கச்சேனை மஸ்ஜிதுர் ரஹ்மா ஜும்ஆ பள்ளிவாசலின் நீண்டகால தேவையாக இருந்து வந்த ஒலிபெருக்கி வசதியை வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்கு உட்பட மிகவும் பின்தங்கிய பிரதேசத்தில் அமைந்துள்ள இப்பள்ளிவாசலின் இறை அழைப்பு பணிக்கு அவசியமாக காணப்பட்ட ஒலிபெருக்கி வசதியை ஏற்படுத்தி தருமாறு அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனமான நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது
இதற்கமைய நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் அமைப்பு கேட்டுக் கொண்டதற்கு இணங்க நிந்தவூரைச் சேர்ந்த கிராம சேவை உத்தியோகத்தரும் கட்டார் நாட்டில் சிரேஷ்ட திட்ட முகாமையாளராக கடமையாற்றி வரும் அல்-ஹாஜ் ஏ ஜிப்ரி தனது மனைவியின் ஹாமிதுலெவ்வை பஸல்லனா அவர்களின் ஞாபகார்த்தமாக இறை திருப்தியை நாடி சுமார் ஒரு லட்சம் ரூபா செலவில் இந்த பள்ளிவாசலுக்கு தேவையான ஒலிபெருக்கி வசதிகள் வழங்கி வைத்துள்ளார்
இதனை கையளிக்கும் நிகழ்வு இன்று அட்டாளைச்சேனை றஹ்மத் நகர் கச்சேனை மஸ்ஜிதுர் ரஹ்மா ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்றது
பெஸ்ட் ஒப் யங் அமைப்பின் தலைவர் ஐ எம் நிஸ்மி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஏ ஜிப்ரி அவர்களின் புதல்வர் ஜிப்ரி முஹம்மட் பர்ஹத் மனாஸ், நிந்தவூர் கதீப் பேஷ் இமாம் சம்மேளனத்தின் தலைவர் மௌலவி எம் ஏ சி எம் அப்துர் ரஹ்மான், பெஸ்ட் ஒப் யங் அமைப்பின் செயலாளர் ஏ புஹாது, பொருளாளர் எஸ் ஏ பாஸித் ஆகியோர் கலந்து கொண்டனர்
0 comments :
Post a Comment