கல்முனை மாநகர சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சந்திரசேகரன் ராஜனுக்கு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த முதலாம் திகதி கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் ஆஜராகாத காரணத்தினால் கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் சம்சுதீன் இந்த பிடிவிறாந்தை பிறப்பித்திருக்கிறார்.
கல்முனை இஸ்லாமாபாத்தில் காணியொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பான வழக்கு கடந்த 1ஆம் தேதி புதன்கிழமை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது .
இஸ்லாமாபாத்தில் இருக்கின்ற தமது காணியில் கட்டுமான பணிகளை செய்வதற்கு சென்றவேளை காணிக்குள் அத்துமீறி நுழைந்து தன்னையும் தனது வேலையாட்களையும் விடாது தொந்தரவு இடையூறு செய்து அச்சுறுத்தல் விடுத்தமையை எதிர்த்து கல்முனையைச் சேர்ந்த அப்துல் ஹமீட் ஜவாஹிர் என்பவர் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார் .
அந்த வழக்கு 1 ஆம் திகதி புதன்கிழமை எடுத்துக் கொள்ளப்பட்டது.
எதிராளிகள் ஆக மாநகரசபை சந்திரசேகரன் ராஜனும் கல்முனை மெதடிஸ்த குரு கிருபைராஜா பாஸ்டரும் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
வழக்கு நடந்த அன்று கிருபைராஜா பாஸ்டர் சமூகமளித்திருந்தார். அவருக்கு ஒரு லட்ச ரூபா சரீர பிணையுடன் நீதவான் விடுவித்தார்.
உறுப்பினர் ராஜன் சமூகமளிக்காத காரணத்தால் அவருக்கு நீதவான் பிடிவிறாந்து பிறப்பித்தார்.
எதிராளிகள் சார்பிலே சிரேஷ்ட சட்டத்தரணி என் .சிவரஞ்சித் ஆஜராகி வாதிட்டமை குறிப்பிடத்தக்கது.
அடுத்த தவணை 19.7.2022 நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment