அமலாக்கத்துறையை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் சென்னையில் அமலாக்கத்துறை அலுவலகம் முற்றுகை போராட்டம்



பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்புக்கு சொந்தமான வங்கி கணக்குகளை அமலாக்க இயக்குனரகம் (ED) தற்காலிகமாக முடக்கியதை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக இன்று(03-06-2022) தேசம் தழுவிய போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் சென்னை மாவட்டம் சார்பாக சென்னை கிரீம்ஸ் ரோட்டில் அமைந்துள்ள அமலாக்கத்துறை அலுவலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சென்னை மண்டல தலைவர் பக்கீர் முகம்மது தலைமை தாங்கினார். தென்சென்னை மாவட்ட தலைவர் அபூபக்கர் சாதிக் வரவேற்றார்.

எஸ்.டி.பி. ஐ கட்சி மாநில பொதுச்செயலாளர் அச.உமர் ஃபாரூக், பாப்புலர் ஃப்ரண்ட் மாநில துணைத்தலைவர் காலித் முஹம்மது, மாநில செயலாளர் நாகூர் மீரான் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பேசியதாவது, 'அமலாக்கத்துறையின் இந்த சமீபத்திய நடவடிக்கை கடந்த சில ஆண்டுகளாக இயக்கத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட அடக்குமுறைகளின் ஒரு பகுதிதான். மக்கள் இயக்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புகள், எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் மற்றும் நாட்டிலுள்ள ஆளும் கட்சியை விமர்சிக்கும் எந்த ஜனநாயகக் குரல்களையும் ஒடுக்குவதற்கு அரசியல் எஜமானர்களின் கைக்கூலியாக இது போன்ற ஏஜென்சிகள் செயல்படுகிறது என்பது மீண்டும் தெளிவாகிறது.' என்று குற்றம் சாட்டினார்.அம்னெஸ்டி இன்டர்நேஷனல், கிரீன் பீஸ் போன்ற உலகப் புகழ்பெற்ற அரசு சாரா நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளும் இதே முறையில் முடக்கப்பட்டுள்ளன.

பாஜக தலைவர்களின் ஊழல் மற்றும் கருப்புப் பண பரிவர்த்தனைகள் கோடிகளுக்கு மேல் இருந்தபோதும் அமலாக்கத்துறைக்கு அதுபற்றி எந்த கவலையும் இல்லை. அரசுக்கு எதிரான எதிர்ப்புக் குரல்களை குறிவைத்து மௌனமாக்க அமலாக்கத்துறை மற்றும் பிற அமைப்புகளை பாஜக எப்போதுமே தவறாகப் பயன்படுத்துகிறது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஒரு ஜனநாயக ரீதியில் செயல்படும் அமைப்பாகும். இது ஒடுக்கப்பட்ட பிரிவைச் சார்ந்த மக்களிடமிருந்து உருவானது மற்றும் நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் நம்பிக்கையை பாப்புலர் ஃப்ரண்ட் வென்றுள்ளது. எனவே மக்கள் எங்கள் அமைப்புக்கு தங்கள் நன்கொடைகள் மூலம் உதவுகிறார்கள். இந்த காரணத்திற்காக அமைப்பானது ஆரம்பத்தில் இருந்தே எந்தவொரு சிறிய மற்றும் பெரிய நிதி பரிவர்த்தனைகளையும் வெளிப்படைத்தன்மையுடன் செய்யப்படுவதை ஒரு கொள்கையாகக் கொண்டுள்ளது.

சங்பரிவார அமைப்புகளின் பிரித்தாளும் அரசியலுக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் எடுத்துள்ள சமரசமற்ற நிலைப்பாடுதான் இந்த அமைப்பை அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்குகளில் சிக்க வைப்பதற்கான ஒரே காரணம் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். ஆர்எஸ்எஸ்-ன் தீய திட்டங்களுக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டையும், எதிர்ப்பையும் பாப்புலர் ஃப்ரண்ட் தைரியமாக எதிர்கொள்ளும். ED ன் இதுபோன்ற செயல்கள் எங்களை ஒருபோதும் அச்சுறுத்தாது என்று தெரிவித்தனர்.

மேலும் பாஜக தலைமையிலான மத்திய அரசின் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையையும், அதிகார துஷ்பிரயோகத்தையும் கண்டிக்க ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ள நாட்டு மக்கள் அனைவரும் முன்வர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.

இறுதியாக தென்சென்னை மாவட்ட செயலாளர் முகைதீன் அன்சாரி நன்றி கூறினார் .

இந்த முற்றுகை போராட்டத்தில் ஏராளமான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் பெருந்திரளாக கலந்துக்கொண்டு அமலாக்கத்துறை மற்றும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :