குப்பைகள், விலங்குகழிவுகள் கொட்டப்பட்ட மற்றும் சல்பீனியாக்கள் நிறைந்த கல்முனை சாய்ந்தமருது வண்ட் வீதியில் அமைந்துள்ள நீரோடையை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் நீர்ப்பாசன திணைக்களம் மற்றும் கல்முனை மாநகர சபை என்பன இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த பணியில் கல்முனை பிரதேச நீர்ப்பாசன காரியாலய பொறியியலாளர் என். புவிரஞ்சினி, கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்சத் காரியப்பர், நீர்ப்பாசன திணைக்கள பொறியியல் உதவியாளர் எம்.ஐ.எம். அமீன், நீர்ப்பாசன திணைக்கள தொழிநுட்ப உதவியாளர் ஈ.எம். ஜெயபோசன், மாநகர சுகாதாரப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி யூ.எம். இசாக், சுகாதார மேற்பார்வையாளர் அதுஹம் , சுகாதார ஊழியர்கள், வாகன சாரதிகள் எனப்பலரும் கலந்து கொண்டு நீரோடையை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
சட்டவிரோத மனிதாபிமானமற்ற கழிவகற்றல் நடவடிக்கை மூலம் சுற்றாடலுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நிறைய விலங்குக்கழிவுகள், குப்பைகள் இந்த நீரோடையில் கொட்டப்பட்டிருந்த நிலையில் இந்த நீரோடையிலிருந்து நிறைய விலங்கு கழிவுகளும், குப்பைகளும் இன்று அகழ்ந்தெடுக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் உன்னிப்பாக இந்த இடங்கள் கண்காணிக்கப்பட்டு சட்டவிரோத மனிதாபிமானமற்ற கழிவகற்றலை மேற்கொள்வோருக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்க கல்முனை மாநகர சபை தயாராக இருப்பதாக கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்சத் காரியப்பர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment