கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட ஓட்டமாவடி பாலத்தை அண்மித்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு - மட்டக்களப்பு பிரதான வீதியான இதுவே ஓட்டமாவடி பிரதேசத்திற்கு உள்நுழையும் ஒரேயொரு இடமாக காணப்படுகிறது.
ஓட்டமாவடி ஆற்றோடு இணைந்த வகையில் காணப்படும் இயற்கை அழகு மிக்க குறித்த இடத்தில் கோழிகளின் கழிவுகள் மற்றும் குப்பைகளை சிலர் மூடை மூடையாக வீசிச் செல்கின்றனர்.
இதனால் அப்பகுதி கடும் துர்நாற்றம் வீசும் பகுதியாக மாறியுள்ளதோடு, அப்பகுதியால் பயணிக்கும் பொதுமக்கள் மூக்கை பொத்திக் கொண்டு செல்கின்றனர்.
குறித்த பகுதியால் நாளாந்தம் அலுவலகங்களுக்குச் செல்லும் உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்குச் செல்வோர்கள் என அனைவரும் பல்வேறு அசௌகரியங்களுடனே தினமும் பயணம் செய்கின்றனர்.
அத்துடன், குறித்த இடத்தில் குப்பைகளை உற்கொள்ளும் விலங்குகளும் ஆபத்துக்களை எதிர் நோக்கி வருகின்ற.
எனவே, ஓட்டமாவடி பிரதேச சபை நிர்வாகம் இந்த இடத்தை துப்புரவு செய்து இனிவரும் காலங்களில் அந்த இடத்தில் மிருகக் கழிவுகள், குப்பைகள் கொட்டுவதை தடைசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
0 comments :
Post a Comment