நிந்தவூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 13விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மெக் ஸ்போர்ட்ஸ் பார்க் அரங்கில் இன்று இடம்பெற்றது.
நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினரும், பராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக செயலாளருமான எம்.எம்.எம்.அன்சார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பைசல் காசிம் பிரதம அதிதியாக கலந்து விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்தார்.
இதில் நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப், நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர் கே.எம்.ஜாரீஸ், விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பிரதேசத்திலுள்ள இளைஞர்களின் விளையாட்டுத்திறனை மேம்படுத்தும் நோக்குடன் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பைசல் காசிமின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் இப்பொருட்கள் கொள்வனவு செய்து வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment