கொக்கிளாயில் இருந்து புல்மோட்டைக்கு இயந்திர படகில் கதிர்காம பாதயாத்திரை குழுவினர்.



வி.ரி.சகாதேவராஜா-
ரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் கதிர்காம பாதயாத்திரை குழுவினர் நேற்று முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் செய்திருக்கிறார்கள்.

நேற்று மாலை கொக்கிளாயில் இருந்து இயந்திரப் படகுகள் மூலம் அவர்கள் புல்மோட்டை வந்திருக்கின்றார்கள்.
கடந்த 4 ஆம் தேதி யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து ஆரம்பித்த இந்த பாதயாத்திரை நேற்று 13-வது தினமாக சிறப்பாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
கதிர்காம பாதயாத்திரை பேரவையின் தலைவர் எஸ் .ஜெகராஜா தலைமையில் இந்த குழுவினர் வந்து கொண்டிருக்கின்றார்கள் .
மொத்தமாக எண்பத்தி ஏழு அடியார்கள் இந்த பாதயாத்திரை குழுவில் இடம் பெற்றிருக்கிறார்கள்.
நேற்றைய தினம் கொக்குளாய் முருகன் ஆலய நிர்வாகத்தினர் இன்றைய எரிபொருள் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் அந்த இயந்திர படகுகளை கடற்படை உதவியோடு ஏற்படுத்திக் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :