சிலோன் பைத்துமால் நிதியத்தினால் நாட்டில் உள்ள 17 பல்கலைக்கழகங்களிலிருந்து முகாமைத்துவம் ,வணிகம் கலைத்துறைகளில் தற்பொழுது முதலாம் ஆண்டு பயிலும் 250 மாணவ மாணவிகளுக்கு புலமைப்பரிசில் வழங்கும் திட்டம் இம்முறையும் 8வது தடவையாக நேற்று (12) ஞயிற்றுக்கிழமை பம்பலப்பிட்டியில் உள்ள பைத்துல்மால் நிதியத்தின் தலைமை அலுவலகத்தில் வைத்து வழஙகிவைக்கப்பட்டது.
இந் நிகழ்வு பைத்துல்மால் நிதியத்தின் தலைவா் ஜனாதிபதி சட்டத்தரணி ஏ.ஏ.எம் இல்யாஸ் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பியுஜி நாட்டின் வருகை தரும் நிதிபதியும் இலங்கை அரச சட்டத் திணைக்களத்தின் சிரேஸ்ட மேலதிகச் சொலிஸ்டா் ஜெனரல் பர்சான ஜெமீல் (ஜனாதிபதி சட்டத்தரணி) பிரதம அதிதியாகவும் , ஹேமாஸ் வைத்தியசாலையின் கம்பனியின் தலைவா் சட்டத்தரணி முர்தாஸ் யூசுப்அலி , முன்னாள் பிரதியமைச்சா் ஹூசைன் பைலாவும் கலந்து கொண்டனா்.
இங்கு உரையாற்றிய பைத்துல்மால் நிதியத்தின் தலைவா் - இல்யாஸ் -
இலங்கையில் நிலவிவருகின்ற பொருளாதார சூழ்நிலை கார்ணமாக 2020 ஆம் ஆண்டு பல்கலைக்கழகம் பயிலும் முகாமைத்துவம், கலை மாணவா்களிடமிருந்து 750 விண்ணப்பங்கள் 17 பல்கலைக்கழகங்களிலிருந்து முஸ்லிம் மாணவா்கள் விண்ணப்பித்திருந்தனர். அதில் 500 மாணவா்களை தெரிவு செய்தோம். அதில் 150 ஆண் மாணவா்கள். பெண் மாணவிகள் 600 பேர் இதிலிருந்து தெரியவருவது முஸ்லிம் பெண்கள் பல்கலைக்கழகம் புகும் வீதம் 70 வீதமாக அதிகரித்துள்ளது. வடக்கு கிழக்கு மாணவா்கள் இன்று இங்கு பிரயாணத்திற்காக பெரும் தொகைப்பணத்தினை செலவழிக்க வேண்டியுள்ளது. அதற்காக இங்கு மேல் மாகாணம் புத்தளம், கண்டி பிரதேசத்திலிருந்து 200 மாணவா்களை மட்டும் அழைத்து அவா்களுக்கு இங்கு மாதாந்தம் ருபா 2500 வீதப்படி 6 மாத காலத்திற்கு 15 ஆயிரம் ருபா வழங்கப்படுகின்றது. இதனை உங்களது கல்வி மேம்பாட்டிற்காக செலவிட முடியும். இந்த நாட்டில் உள்ள தனவந்தா்களிடமிருந்து நன்கொடையாக கிடைக்கப்பெற்ற நிதியையே 8வது வருடமாக புலமைப்பரிசில் திட்டத்தினை வழங்கி வைக்கின்றோம்.
இந்த வைபவத்திற்கு பிரதம அதிதியாக வருகை தந்தவரின் உறவினா் காலம் சென்ற நீதியரசா் ஜெமில் அவா்கள் இந்த அமைப்பிலிருந்து இந்த நிதியத்தினை ஆரம்பித்து வைத்தாா்கள். இந் நிதியம் 1957 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படடது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளும் பர்சான ஜெமீல் இந் நாட்டின் முதலாவது முஸ்லிம் பெண் ஜனாதிபதி சட்டத்தரணி, அதுவும் இலங்கை சட்டத் திணைக்களத்தில் 3வது நிலையில் சிரேஸ்ட மேலதிக ஜெலிஸ்டா் ஜெனரலாக பதவி வகிக்கின்றாா். அவா் சட்டக் கல்வியை லண்டன் பல்கலைக்கழகம்,பயின்றவா். இலங்கையின் சட்டக் கல்லுாாிகளில் விரிவுரையாற்றுபவா் அவா் கூறும் அறிவுரைகளை இளம் மாணவ மாணவிகள் ஏற்று அவா் போன்று நீங்களும் கல்வியில் முன்னேற முயற்சிக்கவேண்டும் எனவும் தலைவா் இல்யாஸ் அங்கு தெரிவித்தாா். இந் நிகழ்வில் செயலாளா் நஸ்வி ரகுமான், பொருளாளா் பெரோஸ் நுான், மற்றும் முகாமைத்துவ அங்கத்தவா்கள் நன்கொடையாளா்களும் கலந்து கொண்டு மாணவா்களுக்கு நிதிகளை வழங்கி வைத்தனா்
0 comments :
Post a Comment