வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் 2020 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதி பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு புதன்கிழமை (15) இடம்பெற்றது.
அந்நூர் பாடசாலையின் 2016 க.பொ.த சாதாரண தர மாணவர் அமைப்பினால் ஏற்பாடு செய்த இந்நிகழ்வு அதன் தலைவரும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மாணவருமான எம்.யூ.எப்.இன்ஸாப் தலைமையில் இடம்பெற்றது.
இதில், பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 12 மாணவர்கள் சான்றிதழ்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன், அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வரும் பாடசாலை அதிபர் ஏ.எம்.எம்.தாஹிம் மற்றும் முதுமானி பட்டம் பெற்ற ஆசிரியர் ஏ.எல்.எச்.எம்.சக்கரியா, ஆசிரியை திருமதி ஜே.ஜெயபிரகாஷ் ஆகியோர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில், அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.அஹ்ஸாப் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment