பாக்கிஸ்தான் உயா் ஸ்தானிகா் கொழும்பு அலுவலகத்தினால் கொழும்பு மவாட்டத்தில் வாழும் மூவின மக்களுக்கும் கொழும்பில் உள்ள 40 பிராந்திய ஊடகவியலாளா்களுக்கும் உலர் உணவுப் பொதிகளை இன்று (6.06.2022) தெமட்டக்கொடையில் உள்ள வை.எம்.எம். ஏ மண்டபத்தில் வைத்து பகிா்ந்தளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பாக்கிஸ்தான் உயா் ஸ்தானிகா் ஓய்வு பெற்ற மேஜா் ஜெனரல் உமா் பாருக் புர்க்கி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பகிா்ந்தளித்தாா்.
இந் நிகழ்வின வை.எம்.எம். ஏ தேசியத் தலைவா் சகிட் றிஸ்மி. வை.எம்.எம். ஏ பெண்கள் அணித் தலைவி பவசா தஹா, சிரேஸ்ட ஊடகவியலாளா் அரப் நியுஸ் மொஹமட் காசிம் ரசூல்டீன் ஏற்பாடு செய்திருந்தனா்.
இங்கு உரையாற்றிய உயா் ஸ்தானிகா் - பாக்கிஸ்தான் - இலங்கை உறவு கடந்த 1948 கலாப்பகுதியில் நிலவி வருகின்றது. கடந்த வாரம் இதே மண்டபத்தில் சுயதொழில் முயற்சியாளா்களுக்கு தையல் மெசின்களை வழங்கி வைத்தோம். அத்துடன் கொழும்பு ரோயல் கல்லுாாி முன்பாக 23 இலட்சம் ருபா செலவில் பாதை ஓர நுாலகமொன்றை நிர்மாணித்து திறந்து வைத்தோம். இலங்கையின் பொருளாதார பிரச்சினையில் பாக்கிஸ்தான் முடியுமான உதவிகளை அவ்வப்போது இலங்கை மக்களுக்கு செய்து வருவதாகவும் உயா்ஸ்தானிகா் தெரிவித்தாா்.
0 comments :
Post a Comment