வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் சிரமதான நிகழ்வும் சூழலை அழகு படுத்தும் வேலைத்திட்டமும் சனிக்கிழமை (4) இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் ஏ.ஆர்.முகைதீன் பாவாவின் வழிகாட்டலில், பாடசாலை அபிவிருத்தி குழு செயலாளரும் இளைஞர் சேவை உத்தியோகத்தருமான எஸ்.ஐ.எம்.பஸீல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை இளைஞர் கழக சம்மேளன உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிரமதானம் செய்தனர்.
அத்துடன், பாடசாலை சூழலை அழகு படுத்தும் நோக்கில் பூக்கன்றுகள், நிழல் தரும் மரங்களும் நாட்டி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில், பாடசாலை அதிபர் ஏ.ஆர்.முகைதீன் பாவா, பிரதி அதிபர் எஸ்.பாறூக் கான், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment