கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை மாணவர்களின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பிரயோக கண்காட்சி



நூருல் ஹுதா உமர்-
ல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் கல்வி பயிலும் தரம் - 6 தொடக்கம் தரம் - 11 வரையிலான மாணவர்களினால் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பிரயோக கண்காட்சி இன்று கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரர் எஸ்.சந்தியாகு அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் கலந்து கொண்டதுடன் மேலும் கௌரவ அதிதிகளாக பிரதிக்கல்விப் பணிப்பாளர் வீ.ஹிகானா அலீப், உதவிக்கல்விப் பணிப்பாளர் ( விஞ்ஞானம் ) எம்.எஸ் சாதுல் அமீன், கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ் சரவணமுத்து, இளம் கண்டுபிடிப்பாளர் சோ.வினோஜ்குமார் உட்பட விஞ்ஞான பாட ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.

இக்கண்காட்சியில் சுமார் 250க்கு மேற்பட்ட மாணவர்களின் படைப்புக்கள் பிரயோக ரீதியாக கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. மேலும் கல்லூரி முதல்வர் அருட்சகோதரர் அருட்சகோதரர் எஸ்.சந்தியாகு கருத்து தெரிவிக்கையில் " பாடசாலை விடுமுறைக்கு முன்னரே மாணவர்களுக்கு இக்கண்காட்சிக்கான படைப்புக்களை உருவாக்குவது பற்றிய விழிப்புணர்வுகளை நடாத்தியிருந்தோம். அதனால் மாணவர்களும் தங்களது விடுமுறைக்காலத்தை இவ்வாறான ஆக்கப்படைப்புக்களுக்காக செலவளித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.


ஒரு நாடு அபிவிருத்தி அடைய வேண்டுமெனில் புதிய கண்டுபிடிப்புக்கள் மிக முக்கியமானவை. இக்கண்காட்சியில் உள்ள புத்தாக்கங்களைத் தெரிவு செய்து அவர்களை பயிற்றுவித்து, அக்கண்டுபிடிப்புக்களை தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்கு அனுப்புவதே இதன் பிரதான நோக்கமாகும். இந்த நோக்கத்திற்காக எங்களுடன் இணைந்து பணியுரியும் அனைவருக்கும் நன்றிகளை கல்லூரி சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்- என்றார் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :