விளையாட்டுத்துறையில் பெண்கள் - கத்தார் அமைப்பு இலங்கையின் மருத்துவச் செலவுகளுக்காக நிதி திரட்டியது



விளையாட்டுத்துறையில் பெண்கள் - கத்தார் அமைப்பின் உறுப்பினர்கள், இலங்கையின் மருத்துவச் செலவுகளுக்காக ஒரு தொகை நிதி திரட்டியது.

சேகரிக்கப்பட்ட நிதியானது நேற்று 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் திகதி WISQ இன் தலைவரால் அமைப்பின் குழு உறுப்பினர்களுடன் இலங்கை தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
விளையாட்டுத்துறையில் பெண்கள் - கத்தார் அமைப்பு என்பது ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும், இது கத்தாரில் வசிக்கும் இலங்கைப் பெண்களின் மறைக்கப்பட்ட விளையாட்டுத் திறன்களை வெளிப்படுத்துவதற்காக மூன்று பிள்ளைகளின் தாயான நுசைலா பதுர்தீனால் ஆரம்பிக்கப்பட்டது. குறுகிய காலத்திற்குள் WISQ ஆனது ஒரு பெரிய அளவிலான உறுப்பினர்களை ஈர்க்க முடிந்தது மேலும் இப்போது எல்லாம் வல்ல இறைவனின் அருளால் பெண்களுக்காக பிரத்யேகமாக மாபெரும் நிகழ்வுகளை நடத்தி வருகிறது.

கத்தாரில் இருந்து செய்திகளுக்காக முஸாதிக் முஜீப்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :