அன்று காலி மாவட்டத்திலே ஓர் ( சுக்ரா) என்றால்???இன்று களுத்துறை மாவட்டத்திலே/வியாங்கல்லைக்கு ஓர் ( புஷ்றா/ bushra)


வியாங்கல்லையைச் சேர்ந்த ....(எல்லோராலும் நாளிம் சாப் என்று அன்பாக அழைக்கப்படுகின்ற )..
சகோதரர் நாளிம் அவர்களுடைய மூன்றாவது இளைய மகள் பாத்திமா புஷ்றா.
இவர்களுக்கு பாலர் பாடசாலையில் படிக்கின்ற காலத்தில் இருந்தே நான் ஒரு ( v.o.g) டாக்டராக ஆக வேண்டும் என்ற ஓர் ஆசை.
ஆனால் தன்னுடைய குடும்பமோ ஆண் சகோதரர்கள் யாருமே இல்லாத ஒரு சாதாரண ஏழைக் குடும்பம்.
அவர்களுடைய தந்தையோ...காலைக் கடயாப்பம் ( றோல்ஸ்/ அப்பம்) போன்றவைகளைச் செய்து ..அதைக் கடை கடையாக சென்று விற்று..தன்னுடைய வாழ்க்கையை ஓட்டக் கூடியவர்.
( தனது தந்தையின் கஷ்டங்களை அன்றே உணர்ந்த சிறுமி புஷ்றா அவர்களும் தன்னுடைய பாடசாலை செல்லுகின்ற சிறிய பருவத்திலே...
தன்னுடைய தந்தைக்கு உதவியாக சைக்கிள் மிதித்து ஊரிலே இருக்கும் கடைகளுக்குச் சென்று...இடியப்பம்/ அப்பம் போன்றவைகளை கொடுத்தும் வந்திருக்கிறார்கள்..என்பதும் ஊரார்கள் அறிந்த உண்மையே.
இப்படியே காலங்கள் கழிய...2016 ஆம் ஆண்டு தன்னுடைய கனவுகளை நனவாக்க..அள்ளாஹ்வின் மீது வைத்துள்ள பாரிய நம்பிக்கையோடும்/ விடாமுயற்சிகளோடும்....
ரஷ்யாவை/ அண்மித்துள்ள (belarus) என்ற நாட்டிற்கு 2016 ஆம் ஆண்டு.... தன்னுடைய வைத்தியப் படிப்பைத் தொடருவதற்காக இலங்கையில் இருந்து தன்னுடைய குடும்ப உறவுகள்/ நண்பர்கள்/ ஊர் மக்களுடைய பிரார்த்தனைகளோடு பயணமாகின்றார்.
அல்ஹம்து லில்லாஹ்/ மிகவும் சந்தோஷமான செய்தி...
அள்ளாஹ்வின் மீதான அசையாத நம்பிக்கை/ தாய்/ தகப்பனுடைய இரவு பகல் பாராது செய்து வரக்கூடிய கடினமான உழைப்பின் காரணமாக....
நேற்றைய தினம் தன்னுடைய ஆறு வருடப் படிப்பைப் பூர்த்தி செய்து (22/06/2022)..belarus நாட்டுப் பல்கலைக்கழகத்திலே (doctor of medicine (md) என்கின்ற பட்டத்தைப் பெற்றிருக்கின்றார்கள்.
வியாங்கல்லையைச் சேர்ந்த முஹம்மத் நாளிம் பாத்திமா புஷ்றா அவர்களுக்கு ஊர் மக்களாகிய நாங்கள் அணைவர்களும்...
மனமார்ந்த நன்றிகளையும்/ வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேலும் அன்று போல் இன்றும்/ என்றும் அள்ளாஹ்வுடைய தீனோடு உங்களுடைய மேலதிக ( V . O . G) சம்பந்தமான படிப்புகளைத் தொடரவும்/ எதிர்காலத்தில் நமது சமூகத்திற்காக பல சேவைகளைச் செய்யவும் வல்லோன் அள்ளாஹ் உங்களுக்கும்/ உங்களுடைய குடும்பத்தார்களுக்கும் அருள் புரிவானாக..ஆமீன்.
பதிவுத் திகதி :- 24/06/2022)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :