சம்மாந்துறையில் "16 Centralian"அமைப்பின் ஏற்பாட்டில் இரத்த தான முகாம்



சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்-
ம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் இரத்த பற்றாக்குறையை பூர்த்தி செய்யும் முகமாக சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் 2013 O/L மற்றும் 2016 A/L கற்ற பழைய மாணவர்களை ஒன்றிணைத்த "16 Centralian"அமைப்பு ஏற்பாடு செய்த இரத்த தானமுகாம் சம்மாந்துறை ஆதார வைத்திய சாலையில் நேற்று (2) நடைபெற்றது.
"16 Centralian" அங்கத்தவர்கள், இரத்த தானம் செய்ய ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 80 க்கு மேற்பட்டோர் இவ் இரத்த தான முகாமில் கலந்து கொண்ட போதிலும் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக 41 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பதிகாரி டாக்டர் றிஸ்வான் தெரிவித்தார்.
இவ் இரத்த தான முகாமிற்கு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் அஸாத் எம் ஹனிபா, வைத்தியசாலை திட்டமிடல் வைத்தியர் நியாஸ் அஹமட் ஆகியோர் ஆலோசனைகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :