கல்வி நேர்மையான சமுதாயத்தை உருவாக்க வேண்டும். கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் அதிசயராஜ். கல்முனை பற்றிமாவில் 222 புலமையாளர் கௌரவிப்பு .



காரைதீவு சகா-
ல்வி நேர்மையான சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் புகழ் பெற்ற கல்மு beனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் புலமையாளர் கௌரவிப்பு விழா கடந்த சனிக்கிழமை அதிபர் அருட்சகோதரர் சந்தியாகு தலைமையில் நடைபெற்றபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்..
கடந்த ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் கல்லூரி சார்பில் சித்தி பெற்ற 222 மாணவர்களுக்கு பாராட்டும் கௌரவமும் வழங்கப்பட்டது .
பிரதம அதிதியாக கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் கலந்து சிறப்பித்தார்.
கௌரவ அதிதியாக கல்முனை வலய பிரதி கல்வி பணிப்பாளர் திருமதி வரணியா சாந்த ரூபன் சிறப்பு அதிதிகளாக கல்முனை தமிழ் பிரிவு கோட்டக் கல்வி பணிப்பாளர் எஸ். சரவணமுத்து சம்மாந்துறை வலய உதவி கல்வி பணிப்பாளர் வி.ரிசகாதேவராஜா கல்முனை வலய ஆசிரிய ஆலோசகர் கே சாந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டு இந்த கௌரவங்களை வழங்கி வைத்தார்கள்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்.
மாணவர்கள் வெறும் புத்தகப் படிப்பை மாத்திரம் நம்பியிருக்கக்கூடாது.
நல்ல விழுமிய. பண்புகளை வளர்த்து கொள்வதோடு ஏனைய திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இன்று எத்துறையை எடுத்தாலும் நேர்மையற்ற போக்கினை காண்கிறோம். பெற்றோலுக்கான வரிசையில் கூட நேர்மையீனம். சுயநலமற்ற பண்புகள் உருவாக வேண்டும்.என்றார்.

உதவி கல்வி பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா
விஷேட அதிதி உரையாற்றினார்.
கடந்த ஆண்டு பரீட்சையில் 190 புள்ளிகளைப் பெற்று சாதனை புரிந்த செல்வன் தவராசா ஹேஷானந்த் உள்ளிட்ட 222 புலமையாளர்கள் நினைவுச் சின்னங்கள் வழங்கி பாராட்டப்பட்டனர்.
கலந்து கொண்ட அதிதிகளுக்கும் அதிபரால் கௌரவம் வழங்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :