குவைத் நாட்டின் 3வது திட்டமான மல்வானை பாடசாலைக்கு 2 மாடிக் கட்டிடம் திறந்து வைப்பு!



அஷ்ரப் ஏ சமத்-
லங்கையில் பின்தங்கிய பாடசாலைகளை அடையாளம் கண்டு அங்கு உள்ள மாணவா்கள் கல்வி கற்பதற்காக குவைத் அரசாங்கம் கல்விக்காக பெருமளவில் உதவி வருகின்றது. குவைத் நாட்டின் துாதுவா் காலிப் எம்.எம். தாஹிர் அவா்களின் ஆலோசனையின் பேரில் குவைத் நாட்டு நன்கொடையாளர்களது உதவித் திட்டத்தின் கீழ் மேலும் ஒரு பாடசாலையான மல்வானை. உல்ஹிடிவலயில் உள்ள அல் மஹூமூத் மாகா வித்தியாலயத்திற்கு 08 வகுப்பறைகளைக் கொண்ட இரு மாடி கட்டிடம் ஒன்றை நிர்மாணித்து அதனை ஞாயிற்றுக் கிழமை 17.07.2022 திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வுகள் கல்லுாாி அதிபா் எம்.ரீ.எம். உஸ்மான் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு குவைத் நாட்டின் துாதுவா் சாா்பாக துாதுரகத்தின் அதிகாரி அஷ்ஷேக மொஹமட் பிர்தௌஸ்,(நளிமி ) பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இக் கட்டிடத்தினை திறந்து வைத்தாா்.

கௌரவ அதிதிகளாக பேருவளை ஜாமியா நளிமீயா கலா பீடத்தின் பணிப்பாளா் அஷ்ஷேக் அகாா் மொஹமட் , இந் திட்டத்தின் செயலாளா் அஷ்’ஷேக் எம்.ஏ.ஏ. நுாறுல்லாஹ், தலைவா் ஏ.ஆர்.எம். அமினுடீன், மற்றும் களனிய தமிழ் மொழி மூலம் பிரதிப் கல்விப் பணிப்பாளா் எம்.ரீ.எம். தௌசீர், மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பிணா்கள், பழையமாணவா்கள் ,உல்ஹிட்டியவல நலன் புரிச் சங்க உறுப்பிணா்களும் பெரும் மளவில் கலந்து கொண்டாா்கள்.

இங்கு உரையாற்றிய துாதரக அதிகாரி பிர்தௌஸ் நளிமி

குவைத் அரசாங்கம் 27 க்கும் மேற்பட்ட பின் தங்கிய பாடசாலைகளில் இவ்வறாக இரண்டு மாடிகள் கொண்ட வகுப்பறைக் கட்டிடங்களை நிர்மாணித்து திறந்து வைத்து வருகின்றது. அதே போன்று மொரட்டுவை பல்கழைக்கழகத்தில் வைத்திய பீடடித்திற்கான நிதியை வழங்கி அதனை நிர்மாணித்து வருகின்றது. அதே போன்று மேசிலங்கா எனும் திட்டத்தினை அமுல்படுத்தி அதனுடாக இலங்கை மகக்ளுக்கு சேவைகளை வழஙக்கி வருகின்றது. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பல்வேறு கட்டிடங்களை நிர்மாணித்துக் கொடுத்துள்ளது. அவா்கள் கல்விக்காக இலங்கையில் பெரிதும் உதவிகளை வழங்கி வருகின்றனா். தற்போது இலங்கையில் உள்ள துாதுவா் கலிப் தாஹிர் இலங்கையையும், இலங்கை மக்களையும் பெரிதும் விரும்பும் ஒரு மனிதா். அவா் தமது நாடு ஊடாக இலங்கைக்கு முடியுமான உதவிகளைச் செய்து வருகின்றாா். இலங்கையைச் சோந்தவா்கள் ஒர் இலட்சத்திற்கும் அதிகமானனோா் பல்வேறு தொழில் தரததில் அங்கு விசாபெற்று குவைத்தில் சேவை செயது வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. எனக் கூறினாா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :