இராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி



னாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமாவை சபாநாயகர் நாளை பகிரங்கமாக நாட்டுக்கு அறிவிப்பார்.

ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் கையொப்பமிடப்பட்டு அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன், அவர் அதை சபாநாயகரிடம் கையளிப்பார் என அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முன்னதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக செய்தி வெளியானது. எனினும், அதனை ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் நிராகரித்ததுடன், அவர், இன்னும் நாட்டில் இருப்பதாகவும், ஆயுதப்படையினரால் அவர் பாதுகாக்கப்படுகிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜூலை 9 ஆர்ப்பாட்டத்துக்கு சற்று முன்பு, ஜனாதிபதி கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையிலிருந்து பாதுகாப்புப் படையினரால் வெளியேற்றப்பட்டார். அதனையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக நாட்டின் கடல் எல்லைக்குள் கடற்படைக் கப்பலில் பாதுகாக்கப்பட்டார்.

எவ்வாறாயினும், நேற்று காலை 9.30 மணியளவில் முப்படைத் தளபதிகளை ஜனாதிபதி நேரடியாக சந்தித்ததாகவும், அதன்பின்னர் அவர் நாட்டில் இருப்பதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

அவர் நாட்டில் எங்கு இருக்கிறார் என்பது சரியாகத் தெரியவில்லை, ஆனால் அவர் இந்த வாரம் நாட்டை விட்டு வெளியேற வாய்ப்புள்ளதுடன், புதிய ஜனாதிபதி பதவியேற்கவும், அனைத்துக் கட்சி அரசாங்கம் அமைக்கவும் வழி ஏற்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :