வன்னி ஹோப் அவுஸ்ரேலியா நிறுவனத்தினால் ஏழு திறன் வகுப்பறைகள் ஆரம்பித்து வைப்பு



ஹஸ்பர்-
வுஸ்ரேலியாவில் இயங்கும் வன்னி ஹோப் மற்றும் ஐக்கிய இராஜியத்தில் இயங்கும் இரட்ணம் பவுன்டேஷன் ஆகிய நிறுவனங்களின் நிதிப் பங்களிப்புடன் திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் பின்தங்கிய கிராமங்களில் உள்ள ஏழு பாடசாலைகளுக்கு திறன் வகுப்பறைகள் தாபித்து அவற்றினை பாடசாலைகளுக்கு உத்தியோகபுர்வமாக கைளிக்கும் நிகழ்வு இன்று (12) திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ். சிறிதரன் தலமையில் இடம்பெற்றது.
திருகோணமலை கல்வி வலயத்திற்குட்பட்ட ஆதிகோனேஸ்வரா மகா வித்தியாலயம், குளக்கோட்டம் தமிழ் வித்தியாலயம், முத்துநகர் முஸ்லிம் அரசினர் கலவன் பாடசாலை, முள்ளிப்பொத்தானை விக்னேஸ்வரா வித்தியாலயம், பாலம்போட்டாறு சித்தி விநாயகர் வித்தியாலயம், கண்ணியா இராவணேஸ்வரா வித்தியாலயம் மற்றும் கோபாலபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆகிய ஏழு பின்தங்கிய பாடசாலைகளுக்கு தலா ஆறு இலட்சம் பெறுமதி கொண்ட திறன் வகுப்பறைகள் வழங்கி வைக்கப்பட்டன.

கிராமப்புரங்களில் டிஜிட்டல் கல்விய அனைவரும் பெற்றுக் கொள்ளவேண்டும் எனும் நோக்குடன் வழங்கப்பட்ட திறன்வகுப்பறை திறப்பு விழா நிகழ்வில் அவுஸ்ரேலியாவில் இருந்து வருகைதந்த வன்னி ஹோப் நிறுவனத்தின் பணிப்பாளர்களான ரஞ்சன் சிவஞானசுந்தரம், வைத்தியர் மாலதி வரன் ஆகியோா் உட்பட பாடசாலை அதிபர்பர்கள், வலயக் கல்விப் பணிமனை அதிகாரிகள், மக்கள் சேவை மன்ற உத்தியோகத்தர்கள், பெற்றோா்கள், பாடசாலை நலன்புரி உறுப்பினர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :