இன்று அம்பலத்தடி பிள்ளையாருக்கு மகா கும்பாபிஷேகம் ஆரம்பம்



வி.ரி. சகாதேவராஜா-
ரலாற்றுப் பிரசித்தி பெற்ற கல்முனை மாநகர் நற்பிட்டிமுனை அருள்மிகு ஸ்ரீ அம்பலத்தடி விநாயகர் தேவஸ்தான மகா கும்பாபிஷேக பெருஞ் சாந்தி நிகழ்வு இன்று(2) சனிக்கிழமை கர்மாரம்பத்துடன் ஆரம்பமாகின்றது.

எதிர்வரும் 5 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற இருக்கின்றது .
மறுநாள் (6) ஆம் திகதி புதன் கிழமை அஷ்டபந்தனை பஞ்சகுண்ட பக்ஷ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் இடம்பெற இருக்கின்றது என ஆலய பரிபாலன சபை பொருளாளர் ஓய்வு நிலை உதவி கல்வி பணிப்பாளர் எஸ்.இலங்கநாதன் தெரிவித்தார்.

குறிப்பாக ,அன்று அதிகாலை 5.56 மணி முதல் 6.44 மணி வரையிலான சுபமுகூர்த்த வேளையில் ஸ்ரீ அம்பலத்தடி விநாயகர் பெருமாளுக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேக குடமுழுக்கு இடம் பெற இருக்கின்றது.

பிரதிஷ்டா பிரதம குரு ஈசான சிவாச்சாரியார் சிவ ஸ்ரீ க.கு. மோஹனாநந்த குருக்கள் தலைமையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற இருக்கின்றது.

கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 11 தினங்கள் மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெறும் 18 ஆம் திகதி திங்கட்கிழமை 1008 சங்குகளுடன் சகஸ்ர நாம சங்காபிஷேகம் இடம் பெறும் என்று பிரதிநிதி எஸ் .இலங்கநாதன் மேலும் தெரிவித்தார்
அதேவேளை அன்று (18) திங்கட்கிழமை காலை 8 மணிக்கு பா ற்குட பவனியும் 9 மணிக்கு சங்காபிஷேகமும் அதனை தொடர்ந்து அன்னதானமும் இடம்பெற இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :