கதிர்காத்திற்கான காட்டுப்பாதையில் குடிநீர் வழங்குவதில் சிக்கலா?



காரைதீவு சகா-
ரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காம பாத யாத்திரீகர்களுக்கு இம்முறை காட்டுப்பாதையில் குடிநீர் வழங்குவதில் சிக்க நிலை எதிர்நோக்கப்பட்டுள்ளதாக பரவலாக கூறப்படுகிறது.

அம்பாறை அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற உகந்தை மலை முருகன் ஆலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் காட்டுப்பாதை வழியாக செல்லும் அடியார்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுமென அறிவிக்கப்பட்டது.

இம் முறை பல்லாயிரக்கணக்கான அடியார்கள் பாதயாத்திரை யில் பயணிக்கவிருக்கின்றனர். இந்நிலையில் குடிநீர் இல்லாத செய்தி இந்துக்கள் மத்தியில் கவலை கொள்ள வைத்திருக்கின்றது.

குறிப்பாக உகந்தை ஆலயத்தில் இருந்து குமுக்கன் வரையான பிரதேசத்தில் பாணமைப்பற்று லாகுகல பிரதேச செயலகமும் குமுக்கன் ஆற்றில் இருந்து யால பிரதேசத்திற்கு திருக்கோயில் சிவ தொண்டர் நிலையமும் யால ஆற்றில் இருந்து கதிர்காமம் வரை மொனராகலை செயலகமும் பொறுப்பாக்கப்பட்டு இருந்தது .
இருந்த பொழுதிலும் சமகால எரிபொருள் பொருளாதார நெருக்கடி காரணமாக வழமைபோல சீராக வழங்குவதில் சிரமம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகின்றது.
இருந்த பொழுதிலும் இதனை செவ்வனே நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் தெரிவித்தார்.
இதேவேளை யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி ஆலயத்தில் இருந்து புறப்பட் அடியார்கள் நேற்று முன்தினம் இரவு சன்னியாசி மலையடி வாரத்திலேயே தங்கி இருந்த பொழுது அங்கு குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை என்று அதன் தலைவர் எஸ் ஜெய ராசா கவலையுடன் தெரிவித்தார்.

அங்கு 300 அடியார்கள் இருந்ததாகவும் மிகவும் கஷ்டத்தின் மத்தியிலே குடிநீரின்றி அந்த இரவை கழித்ததாகவும் சிலர் சன்னியாசி மலையில் உள்ள சுனையிலே உறைந்து போயிருந்த பச்சை நிற தண்ணீரை வடிகட்டி எடுத்து சிலர் அருந்தி யதாகவும் கூறினர்.
எது எப்படி இருந்த பொழுதிலும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோர் நாளை(22) திறக்கப்பட வைக்கும் காட்டுப்பாதை ஊடாக பயணிக்கும் பாத யாத்திரீகர்ளுக்கு சீரான குடிநீர் விநியோகத்தை நிச்சயப்படுத்த வேண்டும் என்று இந்து அமைப்புகள் கோரிக்கை விடுக்கின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :