இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது மின்சார கார்



டியல் மோட்டர்ஸ் நிறுவனம் இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது முழுமையான மின்சார மோட்டார் காரை (29) சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளது.
இந்த காருக்கு 'Ideal Moksha’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த புதிய Ideal Moksha கார், உலகம் முழுவதும் அதிக பிரபலம் பெற்ற ஆஸ்டின் மினி மொக் காரை போன்றது

அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் நேர்த்தியான வடிவமைப்புகளை பயன்படுத்தி அதிக திருப்திகரமான ஓட்டுநர் அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த காருக்கு 'Moksha' என பெயரிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Ideal Moksha கார் இலங்கையின் பாதைகளுக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அதன் தோற்றம், இடவசதி, பயண சொகுசு என்பவற்றின் ஊடாக இந்த தயாரிப்பின் தனித்துவத்தைக் காட்டுகின்றது.

நான்கு சக்கர மின்சார Electric Codricycle மாதிரியை சேர்ந்த Ideal Moksha மோட்டார் கார் 22.46 kWh லித்தியம் பெட்டரி மூலம் இயக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :