அல்-ஹித்மதுல் உம்மாஹ் பௌண்டேசனினால் புனர்நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைகளும் பாடசாலை தளபாடங்களும் கையளிப்பு



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
கிண்ணியா நடுஊற்றில் அமைந்துள்ள தி/கிண்ணியா அல்-அஹ்லா வித்தியாலயத்தின் வகுப்பறைகள் புனர்நிர்மாணிக்கப்பட்டு பாடசாலைக்கான தளபாடங்கள் கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம்  ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்றது.

தன்னார்வத் தொண்டு நிறுவனமான அல்-ஹித்மதுல் உம்மாஹ் பௌண்டேசனினால் தி/கிண்ணியா அல்-அஹ்லா வித்தியாலயம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு பாடசாலை தளபாடங்கள் திருத்தியமைக்கப்பட்டதுடன் பாடசாலை ஆசிரியர்களுக்கான புதிய தளபாடங்களும் வழங்கப்பட்டன.

அதேநேரம், பாடசாலை வகுப்பறைகளுக்கான மின் இணைப்பு பெற்றுக்கொடுக்கப்பட்டதுடன் நிறப்பூச்சுகளும் செய்துகொடுக்கப்பட்டன.அத்துடன் பாடசாலை விடுதிக்கான ஜன்னல் கதவுகளும் பொருத்திக் கொடுக்கப்பட்டு பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் கே.எம்.பிர்தௌஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், துருக்கி நாட்டு தொண்டு நிறுவனமான IHHNL இன் தூதுவர் முஸ்தபா குரு, அவரின் பாரியார் கயா, அல்-ஹித்மத்துல் உம்மாஹ் பௌண்டேசனின் தலைவர் முகம்மட் பாத்திஹ் கஸ்ஸாலி ஆகியோருடன் ஊர் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இதேபோன்று அல்-ஹித்மத்துல் உம்மாஹ் பௌண்டேசன் தி/கிண்ணியா அல் அக்ஸா கல்லூரியின் க.பொ.த.சாதரண தர மாணவர்களுக்கான வகுப்பறைகளை ஸ்மார்ட் வகுப்பறைகளாக புனரமைத்துக் கொடுத்துள்ளதுடன் கிண்ணியா கல்வி வலயத்துடன் இணைந்து கிண்ணியாவின் கல்வி வளர்ச்சிக்கும் பங்களிப்பை நல்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :