இந்து முன்னணி பிரச்சார பயணத்தை தடை செய்ய வலியுறுத்தி, பாப்புலர் ஃபிரண்ட் சார்பில் டிஜிபி யிடம் மனு



இப்ராஹிம் கனி-
மிழகத்தின் பொது அமைதி, சமூக நல்லிணக்கம் மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகியவற்றிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்ற வகையில் இந்து முன்னணி சார்பில் நடைபெறுகின்ற உரிமை மீட்பு பிரச்சார பயணத்தை தடுத்து நிறுத்த கோரி, பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர்கள் தமிழக காவல் துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

இது குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் சென்னை மண்டல தலைவர் பக்கீர் முகமது தெரிவித்திருப்பதாவது,

மாநிலத்தின் பொது அமைதி, சமூக நல்லிணக்கம் மற்றும் சட்ட ஒழுங்குக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்ற இந்து முன்னணி நடத்தும் “இந்துக்கள் உரிமை மீட்பு பிரச்சார பயணத்தை" தடுத்து நிறுத்தக் கோரி மனு.

“இந்துக்கள் உரிமை மீட்பு பிரச்சார பயணம்” எனும் பெயரில் இந்து முன்னணி சார்பில் நடத்தப்படுகின்ற இந்த பரப்புரை, இந்து-முஸ்லிம் மற்றும் இந்து-கிருத்தவ மத மோதல்களை ஏற்படுத்தி நமது தமிழ்நாட்டின் அமைதியையும் சமூக நல்லிணக்கத்தையும் மற்றும் பொது அமைதியையும் திட்டமிட்டு சீர்குலைக்கும் சதியின் வெளிப்பாடாக தீய நோக்கத்தில் நடத்தப்பட்டு வருகிறது.
மேற்படி பரப்புரை தமிழ் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தும் வகையில் கடந்த ஜூன் 28 தேதி முதல் வருகின்ற ஜூலை 31 தேதி வரை 34 நாட்கள் நடைபெறும் என அதன் நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் கூறுகிறார்கள்.
கடந்த ஜூன் 28 தேதி முதல் ஜூலை 03 தேதி (நேற்று) வரையிலான இந்த பரப்புரை தற்போது மதுரை வந்தடைந்துள்ளது. இந்த பரப்புரை துவங்கிய திருச்செந்தூர் முதலாக நேற்று மதுரை வரையில் அந்த அமைப்பின் நிர்வாகிகளால் பேசப்படும், பரப்பப்படும் கருத்துகள் அனைத்தும் திட்டமிட்டு மத மோதல்களை ஏற்படுத்த கூடியதாகவும், பொய்யான தகவல்களை மக்களிடையே பரப்பி தமிழக அரசுக்கு எதிராக மக்களை தூண்டுவதாகவும், அரசு மீதும் காவல்துறை மீதும் அவதூறு செய்வதாகவும் உள்ளன.

பரப்புரையின் போது திண்டுக்கல்லில் அந்த அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறும் போது, வருகின்ற விநாயகர் சதுர்த்தியில் வழக்கத்தை இரண்டு மடங்கு அதிகமாக விநாயகர் சிலைகள் நிறுவப்படும் என தமிழக அரசின் காவல் துறை வழிகாட்டலுக்கு எதிராக பேசி சட்டஒழுங்கு மற்றும் பொதுஅமைதிக்கு எதிராகவும், பாரப்பட்டி விநாயகர் விசர்சனம் சர்ச்சைகுரிய பாதையின் வழியே நடத்தப்படும் என மதகலவரத்தை தூண்டுகின்ற வகையிலும், தமிழக அரசு, சாலை விரிவாக்கத்தின் போது கோவில்களை மட்டும் இடித்துவிட்டு மசூதிகளையும் சர்ச்சுகளையும் இடிக்காமல் அதனை சுற்றி சாலைகளை அமைப்பதாக அரசுக்கு எதிராக மக்களை தூண்டும் வகையிலும் கூறுகிறார்.

மேலும், சமீபத்தில் சர்வதேச அரங்கில் இந்தியாவை தலைகுனிய வைத்த, உச்சநீதிமன்றமே கண்டித்த நுபுர்சர்மாவின் சர்ச்சைகுரிய பேச்சு குர்ஆனில் உள்ளபடியே பேசப்பட்டதாகவும் அதே நுபுர்சர்மாவை அழைத்து வந்து விநாயகர் விசர்சனம் நடத்தப்படும் என கூறுகிறார். இது அமைதி பூங்காவான தமிழகத்தில் இந்து-முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்தி அரசுக்கு தலைக்குனிவை ஏற்படுத்தும் திட்டமிட்ட சதியாகும்.

நெல்லை பரப்புரையில் கோவிலை இடிப்பதை போல சட்டவிரோத மசூதியையும், சட்ட விரோத திடீர் சர்ச்சையும் இந்த அரசு இடிக்குமா? என பேசி தமிழக அரசு மத ரீதியிலான பாகுபாடு காட்டுவது போல சித்தரித்துள்ளார், அதன் வாயிலாக அப்பாவி இந்துக்களிடையே முஸ்லிம் மற்றும் கிருத்தவர்கள் மீது வெறுப்பை பரப்பியுள்ளார்.
மேலும் தென்காசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் அவர் பேசும் போது பிரபல மனித உரிமை போராளியும் பாதிரியுமான ஸ்டேன் சாமி அவர்களை சமூக விரோதி என கூறியுள்ளதோடு, கிருத்தவ பாதிரியும் அறிவிஜீவியுமான திரு.ஜெகத்கஸ்பர் அவர்கள் கிருத்தவர்களுக்கு தனிநாடு வாங்கி கொடுக்க வேண்டும் என பிரிவினையை தூண்டும் வகையிலும் அவருக்கு இந்துகளால் பாடம் புகட்டப்படும் என மிரட்டல் விடுத்துள்ளதன் வாயிலாக இந்து-கிறித்தவ கலவரத்தை தூண்டியுள்ளார். மட்டுமல்லாமல், தமிழக காவல்துறையின் ஒரு பிரிவினர் மிஷனரி மற்றும் நக்சலைகளின் பிடியில் உள்ளதாக ஆதாரமற்ற பொய்களை கூறி அரசுக்கு எதிராகவும் காவல்துறையை களங்கபடுத்தியும் பேசியுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் பரப்புரையின் போது அந்த அமைப்பின் மாநில இணை அமைப்பாளர் பொன்னையா பேசும் போது, இஸ்லாமியர்கள் பள்ளிவாசலில் தமிழில் தொழுகை நடத்த தயாரா? என மத உணர்வை கொச்சை படுத்தி பேசி கலவரத்தை தூண்டியுள்ளார். இராஜேஷ் என்பவர் இந்து கோவிலின் வருமானத்தில் 80 சதவீதம் கிருத்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் செலவளிக்கப்படுவதாக கூறி இந்து-முஸ்லிம்-கிருத்தவ சமூகங்களிடையே மத ரீதியான வெறுப்பை பரப்பியுள்ளார்.
பழனியில் அந்த அமைப்பின் மாநில செயலாளர் செந்தில்குமார் பேசுகையில் சர்ச்சைகுரிய வகையில் மத உணர்வை புண்படுத்தி பேசி உச்ச நீதிமன்றமே கண்டித்த நுபுர்சர்மாவை அழைத்து வந்து பழனியில் மாநாடு நடத்தப்படும் என கூறி இந்து-முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்த முயன்றுள்ளார். மேலும், எவன் ஒருவன் இந்து மதத்தை கேவலப்படுத்தினாலும் கொச்சைப்படுத்தினாலும் அவனை தெருவில் நடமாடவிடக்கூடாது என நீதிமன்றமே கூறியுள்ளதாக பேசி இந்துக்களிடையே வெறுப்பை விதைத்து வன்முறைக்கு தூண்டியுள்ளார்.
ஆகவே இவ்வாறாக “இந்துக்கள் உரிமை மீட்பு பிரச்சார பயணம்” எனும் பெயரில் “இந்து முன்னனி” அமைப்பு இந்துக்களை முஸ்லிம் மற்றும் கிருத்தவர்களுக்கு எதிரான கலவரத்திற்கு தூண்டுகிறது, மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசுக்கு எதிராக செயல்படுவதோடு, காவல்துறையின் கண்ணியத்தையும் நாசமாக்கும் வகையில் பொய்யான சங்கதிகளை கொண்டு அவதூறு பரப்புகிறது, இந்திய அரசமைப்பின் மதசார்பின்மை கொள்கைக்கு எதிராக சதி செய்து திட்டமிட்டு செயல்படுகிறது. இதனால் தமிழ்நாட்டின் ஜனநாயகம் மற்றும் மதசார்பின்மை பாதிக்கப்பட்டுள்ளது. இந்து-முஸ்லிம்-கிருத்தவ மக்களிடையே அச்சமும், ஸ்திரதன்மை இன்மையும் ஏற்பட்டு மாநிலத்தின் பொது அமைதி, சமூக நல்லிணக்கம் மற்றும் சட்ட ஒழுங்குக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஆகவே மேற்கண்ட குற்றவாளிகள் மீது உடனடியாக தக்க குற்ற நடவடிக்கை எடுப்பதோடு, திட்டமிட்ட தீய எண்ணத்தோடு நடத்தப்படும் “இந்துக்கள் உரிமை மீட்பு பிரச்சார பயணத்திற்கு" உடனடியாக தடை விதிக்குமாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளோம் என தெரிவித்தார்

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது தென் சென்னை மாவட்ட செயலாளர் மொய்தீன் அன்சாரி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயினுலாபிதீன் ஆகியோர் உடன் இருந்தனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :