எரிபொருளுக்காக காத்திருந்த மற்றுமொருவர் உயிரழப்பு.



ஏ.எஸ்.எம்.ஜாவித்-
னது வாகனத்திற்கு எரிபொருள் நிரப்புவதற்காக பம்பலபிட்டி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று இரவிலிருந்து காத்திருந்த 60 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தை ஒருவறே இன்று காலை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இவ்வாறு மரணமானார்.
முல்லைத்தீவு நீராவிப்பிட்டியை பிறப்பிடமாகவும் புத்தளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் தனது தகப்பனை இழந்த நான்கு வயது மற்றும் ஏழுவயது பேரப்பிள்ளைகளுக்கு ஏற்பட்ட சிறுநீரக நோய்க்கு கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் அடிக்கடி சிகிச்சை பெறுவதற்காக கொழும்புஇ ராஜகிரிய பகுதியில் ஒருவருட காலமாக தற்காலிகமாக வசித்து வந்துள்ளார்.
நான்கு வயதுடையவருக்கு கிளினிக் போவதும் 7வயதுடையவருக்கு இரத்த மாற்று சிகிச்சை பெறுவதற்கும் இவர் அவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று வருவதாகும்.
இவ்வாறான நிலையில் குறித்த நபர் தனது மோட்டார் சைகிளுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக நேற்று (06) இரவு 8.00 மணிக்கு பம்பலபிட்டியில் உள்ள ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குச் சென்று நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்துள்ளார். இந்நிலையில் நல்லிரவு வேளையில் அவருக்கு திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக அயலில் நின்றவர்கள் உடநடியாக அம்பியுலன் சேவைக்கு தகவல் அனுப்பி அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை அவர் மரணமானார்.
கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள இவரது உடல் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதுடன் அவரின் உடலை புத்தளத்திற்கு கொண்டு செல்ல உறவினர்கள் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :