ரஞ்சனுக்கு பூரண சுதந்திரத்தை வழங்குங்கள்!-எதிர்க்கட்சித் தலைவர்



னிதாபிமானம் கொண்ட, மக்கள் மனதை வென்ற அரசியல்வாதியான ரஞ்சன் ராமநாயக்க அவர்களுக்கு கிட்டிய நாட்களில் பூரண சுதந்திரம் கிடைக்கும் என தானும் அனைத்து அரசியல்வாதிகளும் மற்றும் சகல இலங்கையர்களும் எதிர்பார்த்துள்ளனர் என வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை நேற்று (30) பார்வையிட சென்ற போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
நீண்ட நாட்கள் செல்வதற்கு முன் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கும் ரஞ்சன் ராமநாயக்க அவர்களுக்கு பூரண சுதந்திரம் கிடைக்கும் என தான் எதிர்பார்பார்ப்பதாகவும், அந்நாள் வரும் வரை காத்திருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

அவர் ஓர் உண்மையான மனிதாபிமானி என்பதோடு ஒரு மக்கள் சார் கலைஞராகவும் மகத்தான பணிகளை நிறைவேற்றியுள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை நேரில் சென்று பார்வையிட விஜயம் செய்த எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அவர்கள் ரஞ்சன் ராமநாயக்கவுடன் நீண்ட நேரம் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்.

மனிதாபிமான மிக்க அரசியல்வாதிவாதியும், மக்கள் சார் கலைஞராகவும் தொடர்ந்து மக்கள் செல்வாக்குள்ள பிரபலம் மிக்க ரஞ்சன் ராமநாயக்க அவர்கள், சுதந்திர குடிமகனாக சமூகத்திற்குத் திரும்பி, உறுதியுடன் சமூக நீதிக்காக பாடுபடுவதை பார்ப்பதை ஒரே நோக்கம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :