ஜனாதிபதிக்கும் ஹக்கீமுக்கும் இடையிலான நட்பு வலுவானது



ஆய்வாளர் அஷ்ரப் அலீயின் முகநூலில் இருந்து...
முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உதவியுடன் தான் மிகப் பலம் வாய்ந்த சந்திரிக்கா அரசை வீழ்த்தி ரணில் ஒரு தடவை பிரதமர் ஆக முடிந்தது. அன்று தொடக்கம் இருவருக்கும் இடையில் இருக்கும் நட்பு ஆத்மார்த்தமானது
அது மாத்திரமன்றி இன்று ரணிலின் பஸ்ஸில் ஏறிக் கொண்டு அவரைப் புகழ் பாடும் பலரும் ரணிலை கேவலமாக விமர்சித்த காலத்தில் ரணில் தான் சரியான தலைவன் என்று தூரநோக்குடன் கணித்த ஒரே ஆள் ஹக்கீம்தான்.

ஆனால் 2020ல் ரணில் கட்சியில் நின்றால் தன் கட்சி அழிந்துவிடும் என்ற நிலையில் தான் அவர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தாரே தவிர, ரணிலுடனான நட்புறவில் எந்த மாற்றமும் இல்லை..
காலத்துக்குக் காலம் ஒவ்வொருத்தரை பாராட்டிக் கொண்டும், தூற்றிக் கொண்டும் திரிகின்றவர்கள் ஹக்கீமிடம் போய் அரசியல் கற்றுக் கொள்ள வேண்டும்
இதுவரை ஹக்கீம் தன் கட்சிப் போராளிகளை அடுத்தவரின் உம்மா, மனைவியை, சகோதரிகளை அவதூறாக எழுதச் சொல்லி அதனை ரசிக்கவில்லை. தன் கட்சிப்போராளிகளுக்கு மற்ற கட்சித் தலைவர்களை கண்மூடித்தனமாக வெறுப்பதற்கு கற்றுக் கொடுக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக மேடைகளில் ஏறி பெண்களை கேவலமாக பேசும் கலாசாரம் ஹக்கீமிடம் இல்லை. இப்படியான சில பண்புகள் காரணமாக நான் மதிக்கும் அரசியல்வாதிகள் பட்டியலில் ஹக்கீம் இருக்கின்றார்.
அதை நான் எந்த விமர்சனத்துக்கும் அஞ்சி மறைக்கப் போவதில்லை.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :